12-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான் 14:26 NKJV.
உங்கள் வாழ்க்கையை நடத்த பரிசுத்த ஆவியானவரை நீங்கள் அனுமதிக்கும்போது,அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார்.பிறருக்கு செவிசாய்ப்பவராக இருப்பதற்கு அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார்.நீங்கள் அதிகமாகக் கேட்க கற்றுக்கொள்ளும்போது,உங்கள் வாழ்க்கையில் அடுத்ததாக நடக்கும் விஷயம் என்னவென்றால்,சரியானது மற்றும் தவறானது எது?,லாபம் மற்றும் லாபமற்றது எது , சரியான நேரம் மற்றும் நியாயமான முறையில் ஆன்மீக ரீதியாக பகுத்தறியத் தொடங்குகிறோம்.
பூமியில் கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தின் போது செயல்பட்ட மிக வல்லமைவாய்ந்த வரங்களில் இதுவும் ஒன்றாகும். அவரது முடிவுகள் எப்போதும் அவரது துல்லியமான பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை.
சாலமன் ராஜா காலத்தில் அவர் புகழ் நாடு முழுவதும் பரவியது, ஏனெனில் நியாயமான முடிவுகளை எடுக்க முடிந்தது,நேர்மையான தீர்ப்பை வழங்க முடிந்தது ,காரணம்,அவர் பிறர் குறைகளை உன்னிப்பாக கேட்கும் இதயத்தை ஆண்டவரிடம் வரமாக பெற்றிருந்ததால் அதை தெளிவாகக் கண்டறிய முடிந்தது.
நாம் கவனத்துடன் செவிசாய்ப்பதில் பகுத்துணர்வு வருகிறது,அது உங்களை ஊக்குவிக்கும் மற்றும் உங்களை ஒரு ஆட்சியாளராக நிலைநிறுத்தும்.
கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியைப் போதிப்பது,பகுத்தறிவு மற்றும் ஆளுமையின் இந்த அற்புதமான ஆன்மீக மண்டலத்திற்கு உங்களைக் கொண்டுவருகிறது!ஆமென் ! 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.