மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

g1235

14-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

‘உன் ஒளி வந்தது’என்று மேற்கண்ட வசனம் கூறும்போது, அது சூரிய ஒளியையோ, ட்யூப் லைட்டையோ அல்லது பிரகாசமான ஒளிரும் நட்சத்திரத்தையோ குறிக்கவில்லை. ‘உங்கள் ஒளி’ என்பது தேவனின் பொருத்தமான வார்த்தையாகும் (RHEMA ),அது உங்கள் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட அல்லது முன்குறிக்கப்பட்டது.பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்ந்து,அதை எடுத்து உங்களுக்கு வெளிப்படுத்துகிறார்.இந்த வெளிப்படுத்ததலே “RHEMA” வார்த்தை’ என்பார்கள்!

வேதத்தில் அவருடைய மகிமையான வார்த்தைகள் நிறைந்திருந்தாலும்,உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு கடவுளின் மகிமையைக் கொண்டுவரும் ஒரு ஏற்ற வார்த்தை உள்ளது.
எரேமியா 15:16 இல் -எரேமியா தீர்க்கதரிசி இதை அழகாகக் கூறுகிறார், உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்பதாக. தீர்க்கதரிசியின் இதயம் அந்த வார்த்தையினிமித்தம் மகிழ்ச்சியில் பொங்கியது.அவர் பயம், நோய், பற்றாக்குறை, மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 10:8-ல் சொல்வது போல்,இந்த வார்த்தை நமக்குச் சமீபமாய் நம் வாயிலும் நம் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த விசுவாசத்தின் வார்த்தையே நாங்கள் பிரசங்கிக்கிற வார்த்தை.நானும் தொடர்ந்து இந்த வார்த்தையினால் உந்தி ஊக்குவிக்கிறேன். தேவன் உங்களை எவ்வாறு பாவம் நீக்கி நீதியுள்ளவர்களாகப் பார்க்கிறார் என்பதை பல்வேறு கோணங்களில் விளக்கி, விசுவாசத்தின் நீதியின் இந்த வார்த்தையை உங்களுக்குக் கொண்டு வருகிறேன். எனவே,உங்களின் அனைத்து பெலவீனம்,மற்றும் முரண்பாடுகளின் நிஜத்தை பொருட்படுத்தாமல் அவர் எல்லா நேரத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்.அவருடைய கிருபை உங்கள் பக்கம் இருக்கிறது. இயேசுவின் கீழ்ப்படிதலினால் அவருடைய நீதி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

உங்களுக்கு இலவசப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தேவனின் தயவு மற்றும் தேவ நீதியைப் பற்றிய செய்திகளைக் கேட்டுப் படித்துக்கொண்டே இருங்கள்,அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தேவனால் வடிவமைக்கப்பட்ட மகத்துவத்தை நீங்கள் கட்டாயமாக அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *