மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்!

28-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்!

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;எபேசியர் 1:17-18NKJV

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மரணம்,அடக்கம்,உயிர்த்தெழுதல் மற்றும் சிம்மாசனத்தில் அமர்ந்ததின் காரணமாக,பிதாவாகிய தேவன் நம் ஒவ்வொருவருக்கும் விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் ஏற்கனவே அருளி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை விசுவாசிகள் அறிய, அப்போஸ்தலன் பவுல் மிகவும் வல்லமை வாய்ந்த உண்மையை மற்றும் கிறிஸ்துவின் தியாகத்தின் சத்தியத்தை அற்புதமாய் வெளிப்படுத்துகிறார்.

இதை படிக்கும் பொழுது நமக்கு மூன்று கேள்விகள் எழுகின்றன:
ஏன் ஆன்மீக ஆசீர்வாதம்?
பூமியில் அல்லாமல் நாம் ஏன் பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்?
இயற்கை உலகில் இந்த ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெறுவது?

ஆகிய கேள்விகளுக்கு எபிரெயர்1:3 நமக்கு பதில் தருகிறது:

நேரம் மற்றும் உலகம் தேவனுடைய வார்த்தையால் உருவாக்கப்பட்டது என்பதை விசுவாசத்தின் மூலம் புரிந்துகொள்கிறோம்,அதனால் காணப்படுவது கண்ணுக்கு தெரியாதவற்றால் உண்டாக்கப்பட்டது என்று அறிகிறோம்.

காணக்கூடிய விஷயங்கள் கண்ணுக்கு தெரியாதவற்றின் துணைக்குழுவாக (subset) செயல்படுகிறது. பூமியில் வெளிப்படுவதற்கு முன்,பிரச்சினை முதலில் பரலோகத்தில் தீர்க்கப்படுகிறது. உண்மையில், ஒவ்வொரு நாளும் பூமியில் நடக்கும் அனைத்தும் முதலில் பரலோகத்தில் தீர்க்கப்பட்ட பிறகே அரங்கேறுகின்றன. இது ஒரு அற்புதமான உண்மை. இது தான் தேவனின் வழக்கமான விதிமுறையாக இருக்கிறது!

தேவன் ஒவ்வொரு காரியங்களை எவ்வாறு பார்க்கிறார் என்பதை பார்த்து மற்றும் பரலோகத்தில் அவரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து கொண்டு பார்த்தால் மட்டுமே,நாம் இயற்கை உலகில் நடைமுறையில் அதை உடனடியாக பார்க்க முடியாவிட்டாலும்,நன்றி செலுத்துவதினாலும் உயர்ந்த புகழினாலும், அந்த காரியம் நடந்து முடிந்ததென்று நினைத்து நாம் பேரானந்தமாக இருப்போம். ஆகவே, எபேசியர் 1:17-20-ல் அப்போஸ்தலன் பவுல் கற்பித்த விதத்தில் ஜெபிப்பது தவிர்க்க முடியாதது, ஞானத்தின் ஜெபத்தின் மூலமாக முதலில் ஆவியில் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் இயற்கை பார்வையால் அல்ல,விசுவாசத்தால்அது நடந்தாக நம்பி நடக்க வேண்டும்.அப்பொழுது நாம் ஆவியில் பார்ப்பது இயற்கையில் வெளிப்படும். ஆமென் 🙏

ஜெபம்: என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே,மகிமையின் பிதாவே, உங்களைக் காண ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குத் தந்தருளும். ஏழ்மையில் செழுமையையும், குறையில் மிகுதியையும், நோயில் குணமடைவதையும், முட்டாள்தனத்தில் ஞானத்தையும், அதிருப்தியில் திருப்தியும் மகிழ்ச்சியையும் காண என் கண்களுக்கு ஞானஒளி கொடுப்பீராக .இதை நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *