09-05-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;(யோவான் 20:22) NKJV
அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:(லூக்கா 24:45 ) NKJV
உயிர்த்த ஆண்டவராகிய இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த உடனேயே, “பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்”என்று சீடர்கள் மீது ஊதினார், உடனே அந்த சீடர்கள் ‘புதிய சிருஷ்டி ‘ ஆனார்கள். அல்லேலூயா ! அவர்கள் தெய்வீக ஜீவனையும், நித்திய ஜீவனையும் பெற்று, அவர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக மாறினார்கள் . அவர்களின் வாழ்க்கை முறை பரிசுத்த ஆவியால் முற்றிலும் மாற்றப்பட்டது. அவர்களின் பார்வை மாறியது,அவர்களின் நடத்தை மாறியது ஏனெனில் அவர்களின் புரிதல் முற்றிலும் மாறிவிட்டது.
இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஜீவன் அவர்களின் புரிதலைத் திறந்து, அவர்களால் வேதவசனங்களை விளங்க முடிந்தது.
அதுவரை அவர்களுக்குப் போதித்தவர்கள் அவர்களுடைய ஆசாரியர்கள்,ரபிகள், தீர்க்கதரிசிகள் மற்றும் கர்த்தராகிய இயேசுவே.
ஆனால், இப்போது பரிசுத்த ஆவியானவர்,உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவாசத்தால், அவர்களில் வாசம் செய்து,அவர்களுக்கு ‘போதகர்’ ஆனார். அவர்கள் எல்லாவற்றையும் அறியத் தொடங்கினர் (“ஆனால் உங்களுக்குப் பரிசுத்தரால் அபிஷேகம் உண்டு, நீங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.”
I யோவான் 2:20 NKJV) அவர்கள் ஆவியானவர் வழிநடத்தும் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள், இதுவே பூமியில் வாழ்கின்ற நித்திய ஜீவனாகும்!
என் அன்பானவர்களே ,இது உங்கள் அனுபவமாகவும் இருக்கலாம். இந்த சீடர்களில் பலர் வெறும் மீனவர்கள், அவர்கள் படிக்காதவர்களாகவும்,உலகம் அறியாதவர்களாகவும் இருந்தனர். ஆனால் உயிர்த்த இயேசுவின் மூச்சு அவர்களை ‘புதிய சிருஷ்டியாக ’ ஆக்கியது – முற்றிலும் புதிய இனமாக மாற்றியது .
நீங்களும் இந்த அனுபவத்தைப் பெறலாம்- பரிசுத்த ஆவியானவர்-உங்கள் அனுபவமாக ! கிறிஸ்து உங்களுக்குள் அனுபவமாக ! -24*7 – கற்றுத்தரும் ஆவியானவரின் அனுபவமாக ! உங்கள் புரிதல் ஒளிரும் மற்றும் உங்கள் வாழ்க்கை ஒருபோதும் பழைய நிலையில் இருக்காது.
இந்த புரிதலுக்காகத் தான் கௌதம புத்தர் தனது குடும்பத்தையும், தனது அன்புக்குரியவர்களையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால், கிறிஸ்து மூலமாக, பரிசுத்த ஆவியின் உருவில் உள்ள கடவுள், உங்களில் வசிப்பதற்காகவும், தெய்வீகத்திற்கு மட்டுமே சொந்தமான அத்தகைய ஆற்றலையும் புரிதலையும் அளிக்க உங்களைத் தேடி வந்துள்ளார்! உங்கள் இதயத்தைத் திறந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க, அன்பான இரட்சகரும், அற்புதமான ஆண்டவருமான இயேசுவை இன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஆமென்!🙏
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்