11-05-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய புதிய சிருஷ்டியின் வல்லமையினால் பிறரை மன்னிக்க இப்பொழுதே கிருபை பெறுங்கள் !
22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார் . (யோவான் 20:22-23) NKJV.
உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு,சீஷர்களின் வாழ்வில் சுவாசத்தை ஊதிய தருணத்தில், அவர்கள் புதிய சிருஷ்டியாக மாறினார்கள்! சீஷர்களுக்கு கடவுள் கற்பித்த முதல் விஷயம்,புது சிருஷ்டி பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் கொண்டது என்பதாகும் .
ஒரு புதிய சிருஷ்டியின் சாராம்சமாக ,பாவங்களை மன்னிக்கவும் அல்லது பாவங்களை தக்கவைத்துக்கொள்ளவும் அதிகாரம் கொண்டது .மனிதன் கடவுளுக்கு எதிராக ( vertical relationship ) அல்லது சக மனிதனுக்கு எதிராக (Horizontal relationship ) பாவங்களைச் செய்யலாம்.
கடவுள் மனிதன் மீது கொண்ட அளவற்ற அன்பினால், முழு மனித இனத்தின் பாவங்களையும் – கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களையும் முழுமையாக இயேசுவின் மூலம் மன்னித்திருக்கிறார்!
ஆனால்,மனிதனின் வாழ்க்கையில் , ஒரு சக மனிதனை முழு மனதோடு மன்னிக்க, (அவனை அல்லது அவளை) அவனுக்கு மன உறுதி தேவைப்படுகிறது.சில நேரங்களில் துரோகம் மிகவும் கடுமையானது, காயம் மிகவும் ஆழமானது ,பிறரை மன்னிக்கவும் ,மறக்கவும் நாம் உண்மையில் போராடுகிறோம். ஆனால் நாம் ஒரு புதிய சிருஷ்டியாக மாறும்போது, ” போகட்டும் விடுங்கள்” (LET GO)என்ற வல்லமை நம்மில் பிறக்கிறது, மேலும் இந்த விடுவிப்பின் கிருபை நம்மை மன்னிக்க உதவுகிறது.
ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ள இந்திய தேசத்திற்கு வந்த மிஷனரிகள், கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் இரக்கமின்றி அவரது அழகான இரண்டு சிறிய மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்டார். இது தேசிய அளவில் செய்தியாகி, குற்றவாளிகள் பிடிபட்டனர்.
இருப்பினும், கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவியும் அவரது விலைமதிப்பற்ற மகளும் அவர்களை முழு மனதுடன் தங்கள் மணிப்பதாக கூறி அவர்களை விடுவிக்கும்படி கோரினர் , ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருந்தனர், மன்னிக்கும் வல்லமை கொண்டவர்கள் – கடவுளைப் போலவே தெய்வீகமானவர்கள். புதிய சிருஷ்டிப்பு தெய்வீகமானது, நித்தியமானது, எவராலும் வெல்ல முடியாதது, அழிக்க முடியாதது மற்றும் அழியாதது. .ஆமென்!🙏
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய புதிய சிருஷ்டியின் வல்லமையினால் பிறரை மன்னிக்க இப்பொழுதே கிருபை பெறுங்கள் !
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.