உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

25-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.லூக்கா 5:6-7 NKJV
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால்,அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:6,11 NKJV

பேதுருவும் மற்ற சீஷர்களும் தன்னிச்சையாக மீன்பிடிக்கச் சென்றபோது பலனளிக்காமல்இருந்ததை வேதத்தில் இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பதையும்,இரண்டு சந்தர்ப்பங்களிலும் கர்த்தருடைய தலையீடு ஏராளமானதை (கற்பனைக்கு எட்டாத பிடிப்பு) கொண்டுவந்ததைக் காண்கிறோம்: அந்த அற்புதம் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருமுறையும்,அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின் மற்றொரு முறையும் நடந்தது.

முதல் சந்தர்ப்பத்தில்,மீன் பிடிப்பு அதிகமாக இருந்ததால்,வலை கிழிந்தது,படகு மூழ்கியது,ஆனால் இரண்டாவது நிகழ்வில்,வலை கிழியவில்லை படகும் மூழ்கவில்லை. இந்த இரண்டிற்க்கும்
என்ன வித்தியாசம்?

முதல் நிகழ்வில், பேதுருவின் நண்பர்கள் பேதுருவுக்கு உதவ வந்தனர்,அபரிமிதமான மீன்பிடிப்பை வலை கிழிந்ததால் முழுவதுமாக நழுவவிடாமல் காப்பாற்றினர்,ஆனால் இரண்டாவது நிகழ்வில் பேதுருவைச் சுற்றி இருந்த சீஷர்களிடம் உதவி வரவில்லை,மாறாக பேதுருவுக்குள் இருந்து உதவி வந்தது.
காரணம், முதல் நிகழ்வில், இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருந்தார், ஆனால் இரண்டாவது நிகழ்வில், கிறிஸ்து,பேதுரு மற்றும் சீஷர்களுடன் இருக்கவில்லை, மாறாக உயிர்த்தெழுந்த இரட்சகர் பேதுருவுக்குள் வாசமாக இருந்தார். இந்த வித்யாசமே வெற்றிக்கு காரணம்!

ஆம் என் அன்பானவர்களே,நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்து உங்களில் வாழ்கிறார். அவரே மகிமையின் நம்பிக்கை! _
பரிசுத்த ஆவியானவர்”உங்களுக்குள் தெய்வீக வாழ்க்கையை”மிகவும் உண்மையானதாக மாற்றினால்,உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இருந்தவண்ணமாகவே இருக்காது. “சிறு பிள்ளைகளே,நீங்கள் தேவனால் உண்டானவர்கள், அவர்களை ஜெயித்தீர்கள்,ஏனென்றால் உங்களில் இருப்பவர் உலகத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” என்று எழுதியிருக்கிறபடி நீங்கள் நம்பிக்கையோடும் வெற்றியோடும் நடப்பீர்கள்.I யோவான் 4:4.அல்லேலூயா!

உங்கள் பரலோகத் தகப்பன் இயேசுவின் மகிமையான நாமத்தில்”உங்களில் உள்ள கிறிஸ்து” பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை உங்களுக்கு வழங்குவாராக! ஆமென் 🙏

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9  ×    =  27