13-04-23
இன்றைய நாளுக்கான கிருபை !
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள், உங்கள் அனுக்கிரகக் காலத்தை இப்போதே அனுபவியுங்கள் !
1. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
II கொரிந்தியர் 6:1-2 (NKJV)
நாம் இனி தேவனிடமிருந்து எதையும் பெற காத்திருக்கவில்லை. மாறாக ,கடவுள் ஏற்கனவே எல்லாவற்றையும் வழங்கியுள்ளார் என்று விசுவாசத்தோடு பெற்றுக்கொள்கிறோம் . நம்முடைய பாவத்திற்காக அவர் பாவமாக மாறினார் அப்படியே அவருடைய நீதியால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம் இது இன்றைய வேத பகுதிக்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது .
கடவுள் ஏற்கனவே நம்மை நீதிமான்களாக ஆக்கிவிட்டார் என்பதை நாம் புரிந்துகொண்டு, அவர் நம்முடைய நீதி என்று ஒப்புக்கொள்ளும்போது, அவருடைய தயவை நாம் பெற்றுக்கொள்கிறோம் மற்றும் அனுக்கிரக காலத்தில் இப்போதே (NOW ) அடையாளங்களையும், அற்புதங்களையும் அனுபவிக்கிறோம் .
ஏசாயா 49:8 வசனத்தில் வாக்குறுதியயாக கூறப்பட்டது நிறைவேறும் நாள் இப்போதே(NOW) என்று அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள் காட்டுகிறார் .ஆம் என் அன்பனவர்களே, உங்கள் ஆசீர்வாதம் இன்று! உங்கள் அதிசயம் இப்போதே (NOW ) !
இயேசுவே உங்கள் நீதி என்றும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து அறிக்கை செய்யுங்கள். உங்கள் அதிசயத்தைப் பெற உங்கள் மனதை ஒருங்கிணைத்து எதிர்ப்பாகும்போது இப்போதே (NOW ) தேவ கிருபை உங்கள் வாழ்வில் நிஜமாகிறது . அல்லேலூயா !!!ஆமென் 🙏
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,உங்கள் அனுக்கிரகக் காலத்தை இப்போதே அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.