மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!!

13-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!!

3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், *பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
20. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, யூதா 1:3, 20 NKJV

நாம் பெற்ற விசுவாசத்தை முழு ஈடுபாட்டுடன் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறோம். இந்த விசுவாசம் நீதியினால் வரும் விசுவாசமாகும். (கலாத்தியர் 3:5,6,24)அதை நாம் ஒரு பரிசாகப் பெறுகிறோம் (ரோமர் 5:17) அதை நாம் நமது கீழ்ப்படிதல்/செயல்களால் பெறுவது அல்ல மாறாக இயேசுவின் கீழ்ப்படிதலினால் மட்டுமே தேவன் நம்மை நீதிமான்களாக்கினார்.

பிசாசை தோற்கடிப்பதற்கான ஒரே வழி, உங்கள் பயம் மற்றும் போராட்டங்களை சமாளிப்பதற்கான வழி,உங்கள் பெலவீனத்திலிருந்ந்து சுகம் பெறுதல் மற்றும் உங்கள் உண்மையான அடையாளம், உங்கள் பரம்பரை மற்றும் உங்கள் இலக்கை அனுபவிப்பதற்கான ஒரே வழி, இயேசுவை விசுவாசமாக பற்றிப் பிடித்துக்கொண்டு, இயேசு நமக்காக சிலுவையில் செய்த உயிர் தியாகத்தைப் பற்றிக்கொள்வதுதான். இயேசு தனக்காக இறக்கவில்லை,ஏனென்றால் அவரில் பாவம் இல்லை.அவர் அவருடைய பாவங்களுக்காக அடிக்கப்படவில்லை,ஆனால் நம்முடைய பாவத்திற்காக அடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடைய அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். இயேசு ஒருபோதும் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை,ஆனால் அவர் பட்ட துன்பம் அனைத்தும் நம் சார்பாக இருந்தது.

நீதியினால் வரும் விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு தக்கவைப்பது அல்லது பாதுகாப்பது?
அந்நியபாஷையில் பேசுவதன் மூலம்! ஆம்!!
பரிசுத்த ஆவியில் ஜெபிப்பதன் மூலம் (அந்நிய பாஷையில் ஜெபிப்பதன் மூலம்) உங்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட அந்த மிகபரிசுத்த விசுவாசத்தின் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அந்நிய பாஷை என அழைக்கப்படும் தேவன் கொடுத்த மொழியில் பேசுவது உங்கள் விசுவாசத்தை வளர்க்க உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து அந்நிய பாஷையில் பேசுவதால்,நீங்கள் வாழ்வில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களாகவும் ஆகிவிடுவீர்கள்.நீங்கள் வாழ்வில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85  −  82  =