26-06-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களை குற்றப்படுத்த முடியாத வாழ்வை அனுபவியுங்கள்!
1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV
மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி குற்றப்படுத்துதல். இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா நோய்களுக்கும்,பயத்திற்கும்,மரணத்திற்கும் குற்றப்படுத்துதல் தான் மூல காரணம்.
குற்றப்படுத்துதலின் வரையறை என்பது மிகவும் வலுவான மறுப்பின் வெளிப்பாடாகும் குற்றப்படுத்தலி லிருந்து யாரும் தப்பமுடியவில்லை. ஒவ்வொருவரும் குற்றப்படுத்துதலை எதிர்கொள்கிறார்கள்,பலர் அதற்கு பின்விளைவுகளான நோய், மனச்சோர்வு,சீக்கிரத்தில் முதுமை அடைவது மற்றும் அகால மரணம் போன்ற கொடிய விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்.
ஆண்டவராகிய இயேசு, அவர் கல்வாரி சிலுவையில் இறக்கவிருந்தபோது, அவர் அனுபவித்த மிகக் கொடூரமான குற்றப்படுத்தல் என்னவென்றால், தேவன் அவரைக் கைவிட்ட தருணமாகும். எல்லா மனித இனமும் முழுவதுமாக குற்றப்படுத்துதலிலிருந்து விடுபட இயேசு இதை சந்தித்தார். அல்லேலூயா!
ஆம் என் அன்பு நண்பர்களே, இன்று இயேசுவின்நிமித்தம் நமக்கு குற்றஉணர்வு இல்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றப்படுத்துதலிலிருந்தும் விடுவிக்கிறார்.
அவர் ஜீவ ஆவியானவராயிருக்கிறார்! நீங்கள் தற்போது எந்த வகையான குற்றஉணர்வுகளை எதிர்கொண்டாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றஉணர்வுகளிலிலிருந்தும் முழுமையாக விடுவித்து, உங்கள் மகிழ்ச்சியையும், இளமையையும் அடையச்செய்கிறார், மற்றும் அவர் உங்கள் இழப்புகளையும், ஆரோக்கியம், செல்வம், புகழ், பதவி, வீடு, வணிகம் ஆகியவற்றின் தோல்வியிலிருந்து விடுவித்து அனைத்து வீணான ஆண்டுகளையும் மீட்டுக் கொடுக்கிறார் க்கிறார். ஆமென் 🙏
பரிசுத்த ஆவியானவரே, நான் உங்களை என் நண்பராக முழுமனதோடு அழைக்கிறேன்.கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக மாற்றியதற்க்கு நன்றி. எனது அனைத்து இழப்புகளையும் மீட்டமைத்ததற்கு நன்றி.நான் உங்களது முழுமையான மன்னிப்பைப் பெற்று,என்னுள் கிறிஸ்துவில் உள்ள ஜீவ ஆவியின் பிரமாணத்தின் செயல்பாட்டை கைப்பற்றிக்கொள்ள உங்களை அனுமதிக்கிறேன். ஆமென் 🙏
கிருபை நற்செய்தி தேவாலயம்!