02-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!
17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17 NKJV
மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜூலை மாத வாழ்த்துக்கள்!
இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவன் ஒரு “மிகுதியான ஆசீர்வாதத்தை”கட்டளையிட்டுள்ளார்.
ஆம்,கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் அவருடைய “மிகுதியான ஆசீர்வாதங்களைத்” பெற்றுத்தருகிற மாதம். இந்த 2024 -ஆண்டின் பிற்பகுதியானது முதல் பாதியை விட
அதிக மகிமையையும் சிறப்பையும் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் தனது பின்மாரி மழையை -பரிசுத்த ஆவியானவரை பொழிகிறார்!
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் “பெற்றுக்கொள்ளுவது” மட்டுமே. ஆம்,இந்த மாதத்தில் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.கடந்த காலத்தில் நீங்கள் துக்கங்கள், தோல்விகள்,ஏமாற்றங்கள், துரோகங்கள் மற்றும் பலவற்றைப் பெற்றிருக்கலாம். ஆனால், இப்போது அலைகளின் திசை மாறிவிட்டன. அவருடைய கிருபை உங்களைத் தேடி வருகிறது.அவருடைய சாதகமான தீர்ப்புகள் உங்களை நியாயப்படுத்தும்.அவருடைய கிருபைகள் உங்கள் மேல் வேகமாக பரவும்,அதனால் நீங்கள் பரலோகத்தில் உள்ள உங்கள் அப்பா தேவனிடம்,”ஏன் என்னை இவ்வளவாக ஆசீர்வதிக்கிறீர்கள்” ? என்று நன்றியின் கண்ணீரோடு கேட்கும்படியாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியலிருந்தும் பெற்றுக்கொண்டு, அதை ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு நாளில் பலமுறை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.அப்படி செய்யும் போது நீங்கள் நிச்சயமாக இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!