மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

04-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:1,2 NKJV‬‬

கிறிஸ்துவோடும், கிறிஸ்துவுக்குள்ளுமான உங்கள் நிலைப்பாடு (POSITION) பாதுகாப்பானது மற்றும் நிரந்தரமானது,அதேசமயம் தற்போது இருக்கும் உங்கள் நிலை தற்காலிகமானது மற்றும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஏனென்றால் உங்கள் தற்போதைய நிலை உங்கள் உணர்வுகள்,உண்மைகள் அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீங்கள் செய்ததின் பிரதிபலன்.
ஆனால்,தேவனோடு அல்லது தேவனில் உங்கள் நிலைப்பாடு முற்றிலும் கிறிஸ்து உங்களுக்காகச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் உணர்வு மற்றும் உண்மையை சார்ந்தது அல்ல.ஏனென்றால் தேவன் எப்போதும் கிறிஸ்துவில் உங்களைக் காண்கிறார்.

தேவன் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஒருநாளும் மாற்றுவதில்லை. உங்களுக்காகவே இவ்வுலகில் வந்து,உங்களுக்காகவே மரித்து,உங்களுக்காகவே அடக்கம் செய்யப்பட்டபடியால் இயேசுவின் நிமித்தம் தேவன் எப்போதும் உங்களைப் பற்றி நல்லதையே நினைக்கிறார்,உங்களைப் பற்றி நன்மையானவைகளையே பேசுகிறார்,எப்போதும் உங்களுக்குச் சிறந்ததையே செய்கிறார். அவர் உங்களுக்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மேலும் அவர் உங்களை தன்னோடு கூட இடங்களில் பிதாவின் வலது பாரிசத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார்.

எனவே, உங்கள் தற்போதைய சூழ் நிலையை (POSITION)ஐ வைத்து உங்கள் நிலையை மதிப்பிடாதீர்கள்,ஆனால் எப்போதும் உங்கள் தற்போதைய நிலையை அவரோடு நிற்க்கும் நிலையை (POSITION)வைத்து மதிப்பிடுங்கள்.
உங்கள் தற்போதைய நிலையை உண்மையானதாக மாற்றும் சவால்கள் வரும்போது, மிகுதியானகிருபையையும், நீதியின் பரிசையும் பெற்றுக்கொண்டு ,அதை வாய்மொழியாக அறிக்கையிடுங்கள்,அப்போது நீங்கள் பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுவீர்கள். அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிறுவப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94  −    =  92