05-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்!
18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.
19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. யோவான் 6:18-21 NKJV
காற்று பலமாக அடித்தது, கடல் சீற்றத்தோடு காணப்பட்டது, இயேசுவின் சீஷர்கள் பயணம் செய்த படகு ஏறக்குறைய கவிழ்ந்துவிடுவதுபோல் அச்சுறுத்தியது.
திடீரென்று, இயேசு தண்ணீரின் மேல் நடந்து, தங்களை நோக்கி வருவதைக் கண்டார்கள். இரவில் இருள் சூழ்ந்திருந்ததால், அவர் சீஷர்களின் ஆத்துமாவின் நேசர் என்பதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.
அவர்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் இரண்டு விஷயங்கள் நடந்தன:
1. அவர்கள் தங்கள் கஷ்டத்தின் மத்தியில் இயேசுவைக் கண்டார்கள்.அவர் கடலில் மேல் நடப்பதைக் கண்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீஷர்கள் பிரச்சனையின் ஊடாக கடந்து சென்றபோது இயேசு அவர்களின் பிரச்சினையின் மீது நடந்து வந்தார்.
2. அவர்கள் இயேசுவை மனமுவந்து தங்கள் படகில் ஏற்றியபோது, காற்று உடனே நின்றது, உடனே அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.
என் பிரியமானவர்களே, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்,நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு உங்கள் பிரச்சனையின் மீது நடந்து வருகிறார் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.அவர் உங்கள் பற்றாக்குறையின் மீது நடக்கிறார்,அவர் உங்கள் நோயின் மீது நடக்கிறார்,அவர் எல்லா மன அழுத்தத்தையும் கடந்து செல்கிறார்.ஒவ்வொரு பிரச்சனையும் அவருடைய பாதபடியாகும்.மேலும்,நீங்கள் அவருடைய சரீரமாக இருப்பதால் அது உங்கள் காலடியிலும் பணிந்துகொள்ளும் மற்றும் நீங்கள் அவை களை ஆளுகை செய்கிறீர்கள்!
தற்சமயம் நீங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அவரைக் காண வேண்டிக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை விரைவுபடுத்தி உங்களுக்கு இயேசுவை வெளிப்படுத்துவார். உங்கள் பிரச்சனையின் நடுவே இயேசுவின் வெளிப்பாடே பிரச்சனைக்கு தீர்வாகும்!
சீஷர்களைப் போலவே, கிருபையையும், நீதியின் வரத்தையும் பெறுங்கள்,அப்போது,காற்று ஓய்வது போல, உங்கள் பிரச்சினையும் நின்று, நீங்கள் விரும்பிய இலக்கை இன்றே அடைவீர்கள்.இயேசு கிறிஸ்துவே கிருபை மற்றும் அவர் உங்கள் நீதியாகிய யெகோவா.அவரை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஒரு வெற்றியாளரை விட அதிகமானவராயிருக்கிறீர்கள்! அல்லேலூயா!ஆமென் !! 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்.
கிருபை நற்செய்தி !