12-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்!
15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15 NKJV
ஒரு பயங்கரமான தொற்றுநோயாக இருந்த கோவிட்-19 இன் காலத்தில்,பலர் பாதிக்கப்பட்டனர் மற்றும் சிலர் மரணத்தை சந்தித்தனர்.இந்த தொற்று மிகவும் கொடியதாய் பரவியது மற்றும் சாதி, மதம், நிறம் அல்லது சமூகம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற தீயாக பரவியது.
ஆனால் இந்த காற்றில் பரவும் நோயை தனது வலிமைமிக்க கரத்தால் தடுத்து நிறுத்திய தேவனுக்கு நன்றி!
அதுபோலவே பாவமும் மரணமும் தொற்றக்கூடியது.ஆதாம் முதல் எல்லாத் தலைமுறைகளிலும், காலங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் பரவி,இந்த பாவத்திற்கு பரிகாரமே இல்லை என்ற சூழ்நிலை தோன்றியபோது, தேவன் இந்த உலகத்தின் மேல் கொண்ட அதீத அன்பின் காரணமாக, தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பி கொடூரமாக பரவி வரும் இந்த பாவத்தின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்காகவே தன் மகனை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
கர்த்தராகிய இயேசு,பூமியில் வாழ்ந்த காலத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால், நமக்கு கிருபையானார். தகுதியற்றவர்களாகிய நமக்கு நிபந்தனையற்ற, மற்றும் உழைத்து பெறமுடியாத கிருபையானார்.
பரிசுத்த ஆவியயாகிய (DOREAH),நீதியின் வரமாகிய நபரின் காரணமாக நமக்கு வந்த கிருபை நமக்குள் கிருபையாய் இருக்கிறார்.
என் அன்பு நண்பர்களே,”எண்கணித முன்னேற்றத்தில்”(ARITHMETIC PROGRESSION ) பாவம் பரவினால் (புற்றுநோயைப் போல வேகமாக பரவினால்), தேவகிருபையானது “வடிவியல் முன்னேற்றத்தில்” (GEOMETRIC PROGRESSION)அதை விட அதிகமாக பரவுகிறது,அதனால் மரணமானது வெற்றியில் விழுங்கப்படும் இதன்நிமித்தம் கிறிஸ்துவின் வாழ்க்கை உங்களுக்குள் ஆளுகை செய்கிறது. ஆமென் !!
“நீங்கள் இருக்கும் ஆழமான குழியை விட இயேசு ஆழமானவர்”.
மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!
கிருபை நற்செய்தி பேராலயம் !