08-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,அவரைப்போல மறுரூபமாகி ஆளுகை செய்ய வைக்கிறது!
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.மார்க் 4:36, 39-40 NKJV
பொதுவான விஷயங்களைப் பற்றிய பயமும், தேவன் மேல் கொண்ட விசுவாசமும் ஒன்றாக சேர்வது இல்லை. விசுவாசம் என்பது ஒருவரிடம் உள்ள ஒரு பொருளை சுதந்தரிப்பதல்ல .மாறாக,விசுவாசம் என்பது உறவைப் பற்றியது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கட்டியெழுப்பிய நபருடனான உங்கள் அறிமுகத்தை அடிப்படையாகக் கொண்டது உறவு.
ஒரு நபரை புரிந்து கொள்வதன் மூலம் அவருடன் உள்ள உறவில் வலுப்பெற்று அவரைப்போல்மறுரூபமாகிறோம்
“சீஷர்கள் இயேசுவை அப்படியே அவர்களுடன் அழைத்துச் சென்றனர்” – இந்த காரியம் சுவாரஸ்யமானது! இயேசுவானவர் சீஷர்களை அவர்கள் இருந்த வண்ணம் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக அவரை அப்படியே சீஷர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
ஆம் என் அன்பானவர்களே,நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதாவது -உங்கள் எல்லா குறைபாடுகளுடனும், இயேசு உங்களை ஏற்றுக்கொள்கிறார். அவர் உங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் மாறுவீர்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் நம் வாழ்வில் வருவதாலும், அவருடைய ஆளுமையின் வெளிப்பாட்டின் விளைவாகவும் நம்மில் மாற்றம் ஏற்படுகிறது.
நாம் இயேசுவை நம் வாழ்வில் வர அனுமதிக்கும் போது, அவர் நம்மை அவரைப்போலவே மாற்றுகிறார்.அவர் விசுவாசத்தாலும், தெய்வீகத்தாலும் நிறைந்தவர்.
“உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் புறம்பான வெளிப்பாடு தான் விசுவாசம். நாம் அவரில் இருப்பது தேவனின் நீதி மற்றும் அவர் நம்மில் இருப்பது-மகிமையின் ராஜாவின் ஆளுகை. ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,அவரைப்போல மறுரூபமாகி ஆளுகை செய்ய வைக்கிறது.
கிருபை நற்செய்தி தேவாலயம்.