21-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய கிருபையும் உங்கள் விசுவாசமும் சந்திக்கும் இடம்!
46. பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
47. அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
52. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். மாற்கு 10:46-47, 52 NKJV
மேற்கண்ட பகுதியில் பார்த்த குருடனின் குணமடைய வேண்டும் என்ற விரக்தியான சூழ்நிலை இன்றும் உங்கள் விரக்தி,உங்கள் இலக்கிற்கு எப்படி வழி வகுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு அற்புதமான சான்றாகும்.
கிருபையானது ,கடைசியாக இருப்பவர்,குறைவானவர்,எல்லாம் இழந்தவர்,தாழ்ந்தவர் ஆகியவர்களைத் தேடி வருகிறது.இந்த கிருபை இயேசு கிறிஸ்துவின் உருவில் வருகிறது.இந்த கிருபையைப் பெறுவதே ராஜ்யத்தில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான விதிமுறையாகும்!இருப்பினும்,ராஜ்யத்தில் அற்புதங்கள் தானாக நடப்பதில்லை.இந்த ராஜ்யத்தில் நம்மைத் தேடி வரும் கிருபையை பெற்றுக்கொள்ள நம் விசுவாசம் இன்றியமையாதது.இந்த ரகசியத்தை புரிந்துகொள்வதே இன்று உங்கள் அதிசயத்தை பெறுவதற்கான திறவுகோல்!
இயேசு எரிகோவிற்குள் வந்தார்,அவர் குருடனைக் கடந்து சென்றார்,வழியோரம் இருந்த அவனுக்கு எதுவும் நடக்கவில்லை என்று மேலே உள்ள பகுதி அழகாகக் கூறுகிறது.ஆனால்,இயேசு எரிகோவிலிருந்து புறப்பட்டு, இரண்டாம் முறை குருடனைக் கடந்து செல்லவிருந்தபோது,அந்த குருடன்,இரண்டாவது முறை அவரைத் தவறவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்து,தன் முழு பலத்துடன் கூக்குரலிட்டான்.இந்த விரக்திதான் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த கிருபையானவரை அப்படியே நிற்க வைத்தது.இந்த விரக்தியின் கூக்குரலைத்தான் இயேசு விசுவாசம் என்று அழைக்கிறார்.
நம்மை நாடி வரும் கிருபையோடு நம் விசுவாசம் சந்திப்பதன் விளைவு அதிசயம்! பார்வையற்ற பர்திமேயு தன் விரக்தியில் கூக்குரலிட்டான் காரணம்”இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை”என்று ஒரு விஷயத்தை அவன் கூக்குரல் எதிரொலித்தது.
என் அன்பானவர்களே,இன்றே உங்கள் நாள்,இப்போதே உங்கள் அதிசயத்தின் நேரம். உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் இயேசுவை நோக்கி கூக்குரலிடுங்கள்,அவருடைய கிருபையை நீங்கள் இன்றே பெறுவீர்கள்!
அவருடைய நீதியானது ஒவ்வொரு தவறான பாதையையும் சரிப்படுத்தி,கோணலானவைகளை நேராக்கும்! இயேசுவின் நாமத்தில் இன்றே உங்கள் அற்புதத்தை பெறுவீர்கள்!! ஆமென்
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய கிருபையும் உங்கள் விசுவாசமும் சந்திக்கும் இடம்.
கிருபை நற்செய்தி தேவாலயம்.