22-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,உங்கள் விரக்தியை,விசாலமான எதிர்காலமாக மாற்றுகிறது!
47. அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
48. அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
49. இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.மாற்கு 10:47-49 NKJV
நீங்கள் விரக்தியடைந்து,உங்கள் அழுகை கேட்கப்படும் என்பதை அறிந்தால்,நீங்கள் எவ்வளவு எதிர்ப்பை சந்தித்தாலும்,விடாமல் தொடர்ந்து அதிசயத்தைப் பெற முன்னேறுவீர்கள்.
மேற்கண்ட வேதப்பகுதியில் வரும் குருடன் முதன்முறையாக கூச்சலிட்டான்,அப்பொழுது சத்தத்தில் ஆண்டவர் இயேசு அவன் சத்தத்தை கேட்டும் கேளாததுபோல் அவனைக் கடந்து சென்றார்.சீஷர்கள் அவனை அமைதியாக இருக்கும்படி மிரட்டினர் .ஆனால்,பர்திமேயு தனது அழுகையின் தீவிரத்தை மேலும் அதிகரித்து கூச்சலிட்டான்.இது விரக்தியின் உச்சத்தை காட்டுகிறது.(முழுமையான உதவியற்ற தன்மையைக் காட்டுகிறது). ஆம்,அவனது விசுவாசம் தேவனின் கிருபையை சந்திக்கும் நேரம் அது.அல்லேலூயா!
என் அருமை நண்பர்களே,உங்களை எதிர்த்துக் குரல்கள் தொனிக்கின்றதா ?உங்கள் தற்போதைய மோசமான நிலையை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தக் குரல்கள் கூறுகின்றனவா? தற்சமயம் என்ன சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் அதில் சமரசம் ஆகுங்கள் என்று குரல்கள் தீவிரமாக வலியுறுத்துகின்றனவா?மனம் சோர்வடையாதிருங்கள்! மகிமையின் ராஜாவாகிய இயேசுவிடம் உங்கள் அழுகையின் கூக்குரலை உயர்த்துங்கள்.அவர் காது கேளாதவர் அல்ல,மாறாக அவரது காதுகள் எப்போதும் உங்கள் அழுகையை உன்னிப்பாகக் கேட்க தயாராக உள்ளது .
உங்கள் கூக்குரல் இயேசுவை அப்படியே நிற்க செய்யும்.அதுதான் அவர் சந்திப்பின் நேரம் ! அதாவது விசுவாசமும்,கிருபையும் சந்திக்கிற இடம் !அற்புதங்கள் தேவனால் மட்டுமே செய்யப்படுகின்றன,அவர் ஒரு அற்புதமான தேவன் என்பதைக் காட்டுவது மட்டுமல்லாமல்,நீங்கள் பரலோகத்தால் சான்றளிக்கப்பட்ட மற்றும் எல்லா மனிதர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான விசுவாசி என்பதைக் காட்டவுமே அற்புதம் செய்கிறார்.ஆம் அவருடைய மாபெரும் கிருபைக்கும் அவருடைய அற்புதமான வல்லமைக்கும் நீங்களே சாட்சி! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,உங்கள் விரக்தியை,விசாலமான எதிர்காலமாக மாற்றுகிறது.
கிருபை நற்செய்தி தேவாலயம்!.