26-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் என்றென்றும் ஆளுகை செய்ய ஆசீர்வாதம் பெறுங்கள்!
26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.ஆதியாகமம் 32:26 NKJV
தேவன் நம் வேதனைக்கு காரணம் அல்ல,ஆனால் அவர் நம் வேதனையை ஒரு பெரிய ஆதாயமாக மாற்றுகிறார்.ஈசாக்கின் மகன் யாக்கோபு,தன் சகோதரனுக்கு அஞ்சி தன் தகப்பன் வீட்டை விட்டு உயிரைக் காத்துக்கொள்ள ஓடிப்போனான்.தன் தாய் மாமன் லாபானிடம் தஞ்சம் புகுந்த பிறகு யாக்கோபு தன் மாமன் வீட்டில் அவர் மந்தையை மேய்ப்பதற்காக வேலை செய்து,அவர் மகள்களில் ஒருத்தியை மணந்துகொள்ளலாம் என்று எத்தனித்திருந்தான்
காலப்போக்கில்,லாபான் தனது தந்திரங்களை பயன்படுத்தி யாக்கோபிடமிருந்து வேலைகளை தனக்கு சாதகமாக பெற்றுக்கொண்டான்.யாக்கோபு தனது சொந்த சகோதரனின் கோபத்திலிருந்து தஞ்சம் தேடி ஓடிய அவல நிலையை அறிந்ததால் அவனை லாபான் ஏமாற்றினான் .(ஆதியாகமம் 31:13) என்று வேதாகமத்தில் பார்க்கிறோம்.
உதவியற்ற யாக்கோபு துரோகம், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டான்.அவன் தன் தந்தை வீட்டுக்கு திரும்பவும் முடியாமல் மற்றும் லாபானுடன் இருக்கவவும் முடியாது என்ற இக்கட்டில் சிக்கிக்கொண்டான்.20 ஆண்டுகளாக அவன் இந்த சோதனையை வேதனையோடு அனுபவித்தான். இந்த சகிக்க முடியாத வேதனை அவனது தெய்வீக இலக்கை அடையச்செய்யும் மாற்றமுடியாத ஆசீர்வாதத்தை தேவனிடமிருந்து தீவிரமாகத் தேடவும் பெறவும் வழிவகுத்தது. – அது சவாலற்ற மற்றும் இணையற்ற.ஆசீர்வாதம் .
என் அன்பானவர்களே, வேதனை என்பது என்னவென்றால்,ஒவ்வொருவரும் விதிவிலக்கு இல்லாமல் வேதனையை கடந்து செல்லக் காரணம் – பல சமயங்களில் அவர்கள் சுயஇச்சை தான், சில சமயங்களில் சூழ்நிலை அல்லது மக்களால் கூட துன்பம் ஏற்படலாம்.ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், எல்லா மனிதர்களும் கடந்து செல்லும் வேதனையை அனைத்தும் இயேசு கடந்து சென்று நமக்காக வெற்றி பெற்றார். எனவே, இந்த இயேசு உங்கள் வேதனையை இன்று பெரும் ஆதாயமாக மாற்றுகிறார்.
எப்பொழுதும் மீளமுடியாத,ஈடு இணையற்ற மற்றும் சவால் செய்ய முடியாத அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள்!
நினைவில் கொள்ளுங்கள்,அவருடைய நீதியின் (நம்முடைய சுயநீதி அல்ல) அடிப்படையில் அவருடைய ஆசீர்வாதத்தைத் தேடும் போது மட்டுமே அது கிடைக்கும்.இயேசுவே நமது நீதி (T’sidkenu).அவருடைய இரத்தம் உங்களை நீதிமான்களாக்கியது,அவருடைய உயிர்த்தெழுதல் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது. அல்லேலூயா! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் என்றென்றும் ஆளுகை செய்ய ஆசீர்வாதம் பெறுங்கள்
கிருபை நற்செய்தி தேவாலயம்!