மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

27-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

5. எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்
26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.ஆதியாகமம் 32:5,26 NKJV

யாக்கோபு தனது சொந்த நாட்டை விட்டும் தனது சொந்த குடும்பத்தை விட்டும் ஓடினான்,ஏனெனில் அவன் சகோதரன் ஏசாவின் ஆசீர்வாதத்தைத் திருடியதால் தன்னைக் கொன்றுவிடுவான் என்று பயத்தில் யாக்கோபு ஓடினான்,பரதேசியாய் ஓடி வந்த யாக்கோபு தனது மாமா லாபானுக்கு கடினமாக வேலைசெய்து, மனைவிகள், குழந்தைகள், காளைகள், கழுதைகள், மந்தைகள், ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்கள் போன்ற பல ஆசீர்வாதங்களைப் பெற்று அதோடு கூட மா வேதனையையும் அனுபவித்தான்!

கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும் ,ஆனால் அதனோடு எந்த வேதனையையும் கூட்டார் என்பதை யாக்கோபு ஒரு காலகட்டத்தில் உணர்ந்தான் (நீதிமொழிகள் 10:22). அந்தோ ! இதை உணர்ந்து கொள்ள அவனுக்கு சுமார் 20 ஆண்டுகள் பிடித்தன.

ஆனால்,தேவன் எப்போதும் உண்மையாகவே இருந்தார்.யாக்கோபு இந்த இருபது வருட போராட்டங்களையும்,வேதனையையும் கடந்து செல்வதற்கு முன்பே,கர்த்தர் பெத்தேலில் அவனுக்குத் தோன்றி,இந்தப் பயணம் முழுவதும் மற்றும் எதிர்கொள்ளும் பெரும் சோதனையின் நேரத்திலும் அவனோடு இருப்பேன் என்று உறுதியளித்தார்.அவர் மனிதர்களை வற்புறுத்துவதில்லை,இருப்பினும் தேர்வை மனிதர்களிடம் விட்டுவிட்டு,அவருடைய நீதியான வழிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கிறார்.அவருடைய நுகம் எளிதானது, அவருடைய சுமை இலகுவானது என்று இயேசு சொன்னார்!

யாக்கோபு இந்த போராட்டங்கள் மற்றும் வேதனைகள் அனைத்தையும் எளிதாகத் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அவன் செய்யவில்லை,ஏனெனில் அவனது மனம் ஏற்கனவே தாய்மாமன் வீட்டிற்கு செல்வதில் உறுதியாக இருந்தது.கடினமான வழியில் வாழ்க்கையின் பாடங்களைக் கற்கும் கொள்கையின் சீஷராக அவன் விரும்பினான் .எந்த ஒரு நல்ல முடிவும் அனுபவத்திலிருந்து வருகிறது,ஆனால் அனுபவமே மோசமான முடிவிலிருந்து தான் வருகிறது என்ற கூற்றின்படி வாழ நினைப்பது,உண்மையான வேதாகம அர்த்தத்தில் ஞானம் அல்ல.

என் பிரியமானவர்களே,இன்று நாம் கடினமான பாதையில் சென்றுகொண்டிருந்தாலும் சரி,இனிமேல் அப்படி செல்ல நேர்ந்தாலும் சரி,ஒவ்வொரு தவறையும் சரிசெய்து நம்மை நடத்தும் அவருடைய மகத்தான அன்பும்,தேவ நீதியும் நம்மோடு இருக்கிறது.”கடினத்தின் மூலம் பாடங்களை கற்றுக்கொள்வது” என்ற கொள்கை வழியாக செல்வதைத் தடுக்க இயேசுவே நமது பகுத்தறிவும் ஞானமுமாய் இருக்கிறார்!ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்று அறிக்கையிடுங்கள்.அவர் உண்மையுள்ளவர் மற்றும் அவருடைய நீதி உங்கள் கால்களை இடறாமலும் ,சிக்கிக்கொள்ளாமலும் காக்க வல்லது! அல்லேலூயா!! ஆமென் 🙏🏽

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  5  =  15