29-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்கள் புதிய மனிதன் வெளிப்பட்டு வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!
26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
27. அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.ஆதியாகமம் 32:26-28 NKJV
யாக்கோபு தனது வாழ்க்கையில் இரண்டு நபர்களுக்கு பயந்தான் –
1. அவன் சகோதரன் ஏசா, 2. அவனுடைய மாமனார் லாபான்.
தேவன் அவனுக்கு இரண்டு பகிரங்க சந்திப்புகளைக் கொடுத்தார்: முதலாவது லாபானைச் சந்திப்பதற்கு முன்பு (ஆதியாகமம் 28) மற்றும் இரண்டாவது அவனது சகோதரன் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்பு (ஆதியாகமம் 32).
லாபானைச் சந்திப்பதற்கு முன் நடந்த முதல் சந்திப்பை அவன் சாதகமாகப் பயன்படுத்தியிருந்தால், அடுத்த 20 ஆண்டுகளின் துரோகம்,ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து அவன் தன்னைக் காப்பாற்றியிருக்க முடியும்!
20 நீண்ட வேதனையான ஆண்டுகள் கடந்துசென்றாலும் அவன் தனது விலைமதிக்கமுடியாத பாடத்தைக் கற்றுக்கொண்டான்.எனவே,இந்த முறை,அவன் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்பு,கர்த்தர் அவனுக்கு மற்றொரு தெய்வீக சந்திப்பைக் கொடுத்தார், இப்போது யாக்கோபு அவரைப் பிடித்து, முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் பரிதாபமாக கண்ணீர்விட்டான்,கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார்.அப்போது விடியல் வரும் வேளையில் ஒரு புதிய மனிதனாக தோன்றினான்! அல்லேலூயா!!
அவன் இனி யாக்கோபு அல்ல.அவன் இப்போது இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டான்,அதாவது தேவனுடைய ராஜகுமாரன் – ஒரு வெற்றியாளன் மற்றும் தேவனுடன் என்றென்றும் ஆளுகை செய்யும் ஆட்சியாளன் . யாக்கோபுக்கு எதிராக ஏசாவின் தீய சக்திகளால் இனி வேலை செய்ய முடியவில்லை.அவனை சுற்றியிருந்த அச்சுறுத்தும் இருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு எதிரியின் சதி முற்றும் முடிவுற்றது . அவன் இப்போது அதிகாரம் பெற்றவன்.மகிமையின் ராஜாவுடன் ஏற்பட்ட தெய்வீக சந்திப்பு எல்லா மாற்றத்தையும் ஏற்படுத்தியது!
அவருக்குப் பின் வந்த தலைமுறையினர் ஆபிரகாமியர்கள் அல்லது ஈசாக்கியர்கள் என்று அழைக்கப்படவில்லை,ஆனால் அவர்கள் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்,ஏனென்றால் தேவனின் அதிகாரம் இந்தப் புதிய பெயரில் அமர்ந்திருந்தது.இன்றுவரை,இஸ்ரவேல் என்று அழைக்கப்படும் தலைமுறை எல்லா எதிர்ப்புகளையும்,கொந்தளிப்புகளையும் மேற்கொண்டு வாலாகமல் ,தலையாகவே உள்ளார்கள்.
என் அன்பானவர்களே,இந்த மாதம் முடிவடையும் நாளில், இது இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்காக இருக்கட்டும்.மகிமையின் ராஜாவுடன் நீங்கள் உண்மையான சந்திப்பையும் அதன் பலனையும் பெறலாம். அவருடன் என்றென்றும் அரசாளுவதற்கு அவருடைய அதிகாரத்தை நீங்கள் பெறுவீர்களாக.இருளின் அனைத்து சக்திகளும் உங்கள் முன் தலைவணங்கட்டும். நீங்கள் தலையாக இருப்பீர்கள்,ஒருபோதும் வாலாக இருக்கமாட்டிர்கள் .ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்கள் புதிய மனிதன் வெளிப்பட்டு வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!