04-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்!
9. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9 NKJV.
என் அன்பான நண்பர்களே, நாம் புதிய மாதத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,நமது மனப்பான்மை மகிழ்ச்சியடைவதும்,களிகூருவதுமாக இருக்கட்டும்.ஏனென்றால் மகிமையின் ராஜா வெற்றிப் பெற்று இப்போது இரட்சிப்புடன் உங்களிடம் வருகிறார்.உங்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வோடு வருகிறார்.இதுவே உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கட்டும்.
ஆம் என் அன்பானவர்களே,இந்த மாதம் நீங்கள் அவருடைய இரட்சிப்பை அனுபவிப்பீர்கள் அதாவது இதை வேறுவிதமாகக் கூறினால் நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் அல்லது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவருடைய நிரந்தர தீர்வை அனுபவிப்பீர்கள்.நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் , நிதிநிலை முன்னேற்றம்,மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து விடுபடுதல்,குடும்ப உறவுகளில் அமைதி அல்லது வேறு ஏதேனும் அழுத்தமான பிரச்சினை போன்ற எல்லாவற்றிலும் நிச்சயமாக தீர்வு உண்டாகும்.
மகிமையின் ராஜா உங்களைக் குணமாக்குவதோடு மட்டுமல்லாமல்,உங்களைச் செழிக்கச் செய்கிறார்.தம்முடைய சிறகுகளில் சுகப்படுத்துதலுடன் மற்றும் கடந்த காலத்தில் உங்களை துன்புறுத்திய எதிரிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கிறார். (மல்கியா 4:2,3). அல்லேலூயா!
இது உங்கள் நாள்! இது உங்கள் வாரம்!! இது உங்கள் மாதம்!!! மகிழ்ச்சியோடு இருங்கள்.உங்கள் வாழ்க்கையில் தேவனின் சந்திப்புக்கான நேரம் இது.நீங்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் அதிசயம் இப்போது வெளிப்படும் என்று விசுவாசியுங்கள்.ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்பதை அறிக்கையிட நினைவில் கொள்ளுங்கள்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்*!
கிருபை நற்செய்தி தேவாலயம்!