மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

grgc911

06-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

9. சீயோன் குமாரத்தியே,மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே,கெம்பீரி; இதோ,உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9

அன்றயக் காலக்கட்டத்தில் எருசலேம் வணிக நகரமாகவும்,வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான கோட்டையாகவும் இருந்தது,ஆனால்,தேவன் அந்நகரத்தை அனைத்து நாடுகளுக்கும் ஜெபவீடாக வடிவமைத்தார்.

இரண்டு காரியங்களிலும் உள்ள ஒரு பொதுவான விஷயம்,‘செயல்பாடு’ – உழைப்பு மற்றும் வியர்வை சிந்தி விளையும் உலக இயக்கச் செயல் அல்லது ‘இளைப்பாறுதல்’ எனப்படும் பரிசுத்த ஆவியின் இயக்கமான செயல்.

உலகத்தின் சலசலப்புக்கு மத்தியில் நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை அளிக்க இயேசு வந்தார். உலகம் பல செயல்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் போது,மனிதர்கள் மன அழுத்தம் மற்றும் பொறுமையின் வரம்புக்கு தள்ளப்படும் போது, ​தேவன் தனது ஓய்வை அனுப்புகிறார். சில சமயங்களில் கட்டாய ஓய்வையும் அனுமதிக்கிறார்,கோவிட்- 19ன் போது முழு உலகுமும் lock downல் அடைபட்டிருந்தபோது வேலை,வேலை என்று பழக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் அமர்வது கடினமாக இருந்தது.

என் பிரியமானவர்களே,சங்கீதம் 37:7 கூறுகிறது,”கர்த்தருக்குள் இளைப்பாறி,அவருக்காகப் பொறுமையாகக் காத்திருங்கள்..”மற்றும் அதே சங்கீதம் 3 மற்றும் 4 ஆம் வசனத்தில் மீண்டும் கூறுகிறது “.. அவருடைய உண்மையில் நிலைநாட்டப்பட்டு நன்மை செய்யுங்கள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு,அவர் உங்கள் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.”

கழுகு உயரமாக பறக்கும்போது போது,காற்றை பயன்படுத்தி வானில் சிரமமின்றி மிதக்கின்றது,மேலும் கிறிஸ்துவில் உங்கள் நிலைப்பாடு என்னவென்றால்,நேர்மறை அல்லது எதிர்மறையான எல்லா சக்திகளுக்கும் மேலாக நீங்கள் அவருடன் உயரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.பரலோகக் காற்றுடன் இணைந்து உயருங்கள்,பரிசுத்த ஆவியானவர் உங்களை கழுகை போல மிதக்கச்செய்வார், நீங்கள் கடினமாக உழைத்து,முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் பெறுவதை விட கிறிஸ்துவில் இளைப்பாறி அதிகமாக சாதிப்பீர்கள்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள் (POSITION ),உங்களில் உள்ள கிறிஸ்துவே உங்களை உயரச் செய்யும் பரலோக வல்லமையாக (ACCOMPLISHMENT) இருக்கிறார்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  ×  6  =  30