12-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நீதியை என்றென்றும் அனுபவியுங்கள்!
5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; எபிரேயர் 10:5 NKJV.
இது பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய கர்தருக்கும் இடையிலான உரையாடலாகும்,இதில் தேவனுடைய குமாரன் நமக்கு இரண்டு விஷயங்களை விளக்குகிறார்.
1. நம்மை ஆசீர்வதிக்க கர்த்தர் மனிதனாக மாற வேண்டிய அவசியம் .
2. இந்த ஆசீர்வாதத்தை நம் வாழ்வில் நிரந்தரமாக்க வேண்டிய அவசியம் .
தேவன் மனிதனை எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கிறார்.அது நம்மை ஆசீர்வதிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவுமே.அதையே நம் வாழ்வில் நிரந்தரமாக வைத்திருக்கவும் விரும்புகிறார.இது நடக்கவே,தனது ஒரேபேறான மகனை பூமிக்கு அனுப்பினார்.
ஆனால்,அவர் பரலோகத்திலிருந்து நம்மை ஆசீர்வதித்திருக்க முடியுமா? அவர் ஏன் பூமிக்கு வர வேண்டும்? ஆம், ஆண்டவராகிய இயேசு பூமிக்கு வந்த பல காரணங்களில்,ஒரு முக்கியமான காரணம்,அவர் நம் எல்லாருடைய பாவங்களையும் ஒரே தியாகத்தால் நிரந்தரமாக அகற்ற விரும்பினார். ஏனென்றால் ஒரே மனிதனால் (ஆதாமின் நிமித்தம் )உலகத்தில் பாவமும் மரணமும் உண்டானது, எனவே ஒரே மனிதனால் (இயேசுவால் ) நீதியும் ,நித்தியவாழ்வும் வாழ்வும் வர வேண்டும் என்பதே காரணம்.
ஒவ்வொரு குற்றமும் நீதிக்காக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.எனவே, தேவனுடைய குமாரன் எல்லா மனிதர்களுக்காகவும் நியாயந்தீர்க்கப்பட முடிவு செய்தார்.தீர்ப்பின் சாபத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்காக அவர் நியாயமான தண்டனையாகிய சிலுவையில் கோர மரணத்தை அனுபவித்தார்.தேவனுக்கு மனுக்குலத்தின் மீது எவ்வளவு மகா பெரிய அன்பு என்பதை இது வெளிப்படுத்துகிறது. அல்லேலூயா!
எனவே, தேவன் மாம்சமும் இரத்தமும் கொண்ட ஒரு உடலைத் தயார் செய்தார்,அந்த உடல் அவரை பூமியில் வசிப்பதற்காக தகுதிப்படுத்தியது. அவருடைய வார்த்தை மாம்சமாகி,மனிதர்களிடையே வாழ்ந்தது, ஆனால் நம்மைப்போல அவர் பாவம் செய்யவில்லை.கர்த்தராகிய இயேசு நம்முடைய பாவங்களுக்காக பலியானார்.கடவுளின் ஆசீர்வாதம் நம்மீது நிரந்தரமாக இருக்கும்படி அவர் நமக்காக சாபமானார் (கலாத்தியர் 3:13,14). அல்லேலூயா!
என் அன்பானவர்களே இன்று நீங்கள் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்,ஏனென்றால் உங்கள் சாபங்கள் அனைத்தும்,உங்கள் மீது எப்படி வந்திருந்தாலும், இப்போது அவை இயேசுவின் மீது வந்துள்ளன. உங்கள் சாபங்களால் அவர் மரித்தார். உங்கள் எல்லா தவறான செயல்களுடனும் அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கினார். ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதியாக இருக்கிறீர்கள்!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நீதியை என்றென்றும் அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!