14-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்!
9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:9,10 NKJV.
தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்குக் கொண்டுவருவதற்கான தேவனுடைய சித்தம்,எல்லா மனிதர்களுக்கும் நிரந்தர ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதாகும். நிரந்தரமாக ஆசீர்வதிக்கப்படுவதற்கு,நிரந்தரமாக மன்னிக்கப்படுவது அவசியம்.
எனவே, “இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை” என்று எழுதப்பட்டுள்ளபடி, எல்லா மனிதகுலத்திற்கும் பாவ மன்னிப்பைக் கொண்டுவருவதற்காக,தேவனின் குமாரன் தன்னையே பலியாக – அதாவது மீட்கும் பலியாக மனமுவந்து மரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ” (எபிரெயர் 9:22). அவருடைய சிலுவை மரணத்தின் மூலம், அவருடைய இரத்தம் நித்திய ஆவியின் மூலம் செலுத்தப்பட்டதிலிருந்து எல்லா காலங்களிலும் எல்லா பாவங்களையும் மன்னிக்க இடமளித்தார் (எபிரேயர் 9:14).
கல்வாரியில் கிறிஸ்துவின் இந்த வேலையை ஒரு முழுமையான மற்றும் பரிபூரணமான தியாகம் என்று தேவன் சான்றளித்தார்,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி,அவரை என்றென்றும் ஆட்சி செய்ய அவரது வலது பாரிசத்தில் உட்கார வைத்தார்.(எபிரேயர் 10:12, ரோமர் 4:25).
ஆகவே,இயேசு செய்த தியாகம், நம்முடைய எல்லா பாவங்களையும் நிவர்த்தி செய்து, அவற்றை எல்லா நேரங்களிலும் மன்னித்திருப்பதைக் கண்டு, இன்று நாம் தைரியமாக தேவனின் சந்நிதிக்கு வந்து, இயேசுவின் இரத்தத்தைப் பிரகடனம் செய்வதன் மூலம் எல்லாவற்றிலும் நீதிமானாக வாழலாம்,மேலும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஏனென்றால் ,அவருடைய பரிசுத்த இரத்தம் இப்போது நிரந்தரமாக நம்மீது இருக்கிறது! அல்லேலூயா !
நீங்கள் நிரந்தரமாக மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள்!
நீங்கள் நிரந்தரமாக நீதிமான்களாக்கப்பட்டீர்கள்!!
நீங்கள் நிரந்தரமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – அதாவது என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!! அல்லேலூயா. ஆமென் 🙏🏽
கிறிஸ்து இயேசுவில் உங்கள் நீதியை நீங்கள் தொடர்ந்து அறிக்கை செய்ய வேண்டும்,இதன் மூலம் நீங்கள் இந்த பூமியில் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிலும் வெற்றி சிறந்திருப்பீர்கள். ஆமென் 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!