20-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து, உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையை அனுபவியுங்கள்!
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரெயர் 10:22-23 NKJV
இயேசு தம்முடைய ஒரே தியாகத்தால் நம்மை என்றென்றும் பரிபூரணமாக்கியிருப்பதால்(எபிரேயர் 10:12),அவருடைய இரத்தத்தின் மூலம் தேவனிடம் நெருங்கி வருமாறு நாம் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால்,அவருடைய இரத்தம் நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கியுள்ளது.
ஆகையால், அவர் உண்மையுள்ளவர் என்பதால்,சந்தேகமில்லாமல் நம்முடைய விசுவாச அறிக்கையை உறுதியாகப் பற்றிக் கொள்வோம்.
நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டிய அறிக்கை என்னவென்றால்,கிறிஸ்து எனக்குள் இருப்பதால் நான் அவருடைய ஆலயமாய் இருக்கிறேன்.
இப்போது என்னில் உள்ள கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு குணப்படுத்துதலின் வெளிப்பாடாயிருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு தேவனை வெளிப்படுத்துகிறார்!
என்னில் கிறிஸ்து எனக்கு அவருடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனக்கு வெற்றி மற்றும் செழிப்புக்கான தெய்வீக யோசனையாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எல்லா புரிதலையும் கடந்து செல்லும் அமைதியாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து விவரிக்க முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தவராய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து எனது தெளிந்த புத்தியாய் இருக்கிறார்!
என்னில் உள்ள கிறிஸ்து தேவனின் நிபந்தனையற்ற அன்பாய் இருக்கிறார்!அல்லேலூயா!.ஆமென் 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையை அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!