மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

05-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவர்களை நோக்கி:வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.மத்தேயு 28:18-20 NKJV.

மேற்கண்ட வேத வசனத்தில் இருந்து நாம் அனைவரும் அறிந்தபடி,பரலோக ராஜ்யம் பூமியிலும் ஸ்தாபிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக மக்களுக்கு சுவிசேஷம் அறிவைக்கப்படுகிறது.இதுவே கர்த்தரின் சித்தம் ஆகும்.

தேவனுடைய ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவதற்கான பணியை பயிற்சி பெறாதவர்கள்,படிக்காதவர்கள், தாழ்வாக மதிக்கப்பட்டவர்கள் மற்றும் கலிலேயா மாகாணத்தில் இருந்து வந்தவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை அறிந்ததால், தங்கள் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு, இருளின் எல்லாச் சக்திகளையும் முறியடித்தது மட்டுமல்லாமல், அவர்களின் சக்திகளை பகிரங்கமாக அழித்தொழித்தார்.அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,இன்று நாம் இந்த தேவனை- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சேவிக்கிறோம். உங்களிடம் என்ன குறை இருந்தாலும்,என்ன பொறுப்புகளை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று இருந்தாலும் கலங்காதிருங்கள்,எல்லாத்தேவைகளையும் கர்த்தர் உங்களுக்கு வழங்குவார்,ஆதரிப்பார்,விடுவிப்பார் மற்றும் உங்களை வாழ்வில் ஆளுகை செய்ய வைப்பார்.ஒவ்வொரு முறையும் ஒரு சவால் உங்களை எதிர்கொள்ளும்போது,இயேசு உங்கள் நீதியானவர் அதைச் சரிசெய்து,கோணலான பாதையை செவ்வையாக்குவார்.ஆமென்🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதியாகயிருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3  +  3  =