மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

16-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

1. அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2. ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.ரோமர் 4:1-3 NKJV

ஆபிரகாம் ‘விசுவாசத்தின் பிரதானத் தலைவர்.அது அவரின் விசுவாசத்தினால் நீதியாக பார்க்கப்பட்டது . சுவிசேஷம் முதன்முதலில் ஆபிரகாமுக்கு தேவனால் பிரசங்கிக்கப்பட்டது (கலாத்தியர் 4:8).ஆபிரகாம் அதை நம்பினார்.எனவே ,அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்,மேலும் அவர் நம்முடைய தந்தையுமாய் இருக்கிறார்.

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் என்பதற்கான அவரது சாட்சியம் இதுவே,அது அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது அல்லது வரவு வைக்கப்பட்டது! அவர் கீழ்ப்படிந்ததால் அல்ல,ஆனால் அவர் விசுவாசித்ததால் தேவனின் பார்வையில் அவர் நீதியுள்ளவராக அறிவிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அவர் விசுவாசித்த பிறகே அவருடைய கீழ்ப்படிதல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

ஆபிராகாமல் எதுவும் இல்லை,அனைத்தும் தேவனுடைய கிருபையால் சாத்தியம்’என்று அவர் ஒப்புக்கொண்டார்,மேலும் அது ஆபிரகாமுக்கு நீதிக்காகக் கணக்கிடப்பட்டது .அதாவது தேவன் ஆபிரகாமை எப்போதும் முற்றிலும் நீதியுள்ளவராகப் பார்க்கிறார்.
நம் செயல்களை நம்ப முடியாது,ஏனென்றால் அவை சில நேரங்களில் நல்லதாகவும் மற்றும் சில நேரங்களில் கெட்டதாகவும் இருக்கும்.ஆனால்,தேவன் எப்போதும் நல்லவர்! அவர் உண்மையுள்ளவர்.அவரை நம்பலாம், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவருடைய குமாரனாகிய இயேசுவை உலகத்திற்கு அனுப்பினார், அவருடைய கீழ்ப்படிதல் நாம் முழுமனதோடு விசுவாசிக்கும் போது தேவனுடைய நீதியை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. (ரோமர் 5:19).

ஆம் என் பிரியமானவர்களே, தேவனின் தயவான நீதி முற்றிலும் தேவனுடையது,அதற்கு மனித பங்களிப்பு எதுவும் இல்லை.நாம் அவருடைய நீதியை நம்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம், நமது நம்பிக்கையின் வெளிப்பாடு விசுவாச அறிக்கையாகும்.
ஒவ்வொரு முறையும்,“நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்” என்று சொல்லும் போது அது தேவனுடைய செயல் தான் என்றும்,என்னுடைய செயல் ஒன்றுமில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். இயேசுவின் கீழ்ப்படிதலே தேவனைப் பிரியப்படுத்தியது,என் கீழ்ப்படிதல் அல்ல.இந்த விசுவாசம் என்னை எப்போதும் ஆளுகை செய்ய வைக்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4  ×    =  36