மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

g991

24-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:6,7,29 NKJV.

ஆபிரகாமை நீதிமானாக்கிய விசுவாசமானது – தேவன் இயேசுவின் நிமித்தம் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார் ,அதுவே இன்றும் தேவநீதியாக இருக்கிறது என்பதே.

நாம் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டோம்?சரியானதைச் செய்வதன் மூலமா அல்ல,ஆனால் அநீதியானவர்களை தேவன் நீதிமானாக்கினார் என்று நம்புவதன் மூலம் தான்.

தேவன் அநீதியானவர்களை நீதிமானாக்கியதால்,அநீதியானவர்கள்,தம் நீதி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை,தண்டனை மட்டுமே அவர்கள் தகுதியாக இருக்கிறது. இருப்பினும்,தேவனின் கிருபை என்னவென்றால்,தேவனின் பரிசாகிய நீதி தகுதியற்றவர்களுக்கும் அநீதியானவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பதே.
இந்த தகுதியற்ற மற்றும் நிபந்தனையற்ற பரிசைப் பெறும்போது,அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஒருவன் நீதிமானாக்கப்படும்போது அது அவனை நீதியின் வழியில் வாழ வைக்கிறது மாறாக நீதியின் வாழ்வு அவனை நீதிமானாக்கும் என்பதல்ல.உங்களை நீதிமான்களாக்கிய அவருடைய நிபந்தனையற்ற கிருபைக்காக எல்லா மகிமையும் தேவனுக்கே. இதில் எல்லாம் தேவனுடைய செயல் மாத்திரமே, என்னுடயை செயல் ஒன்றும் இல்லை.

இதைத்தான் ஆபிரகாம் விசுவாசிதார்,அவர் என்றென்றும் நீதிமானாக இருந்தார்.அவர் நம்பியதைப் போலவே நம்பும் நாமும் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள்,அவரைப் போலவே ஆசீர்வதிக்கப்பட்டு, உலகத்தின் வாரிசாக மாறி,பூமியில் ஆளுகை செய்கிறோம்.அல்லேலூயா! ஆமென் 🙏

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும்,ஆபிரகாமை விசுவாசித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் ராஜாக்களாக அரசாளுவதற்கு தேவனுடைய நீதியை பெற்றிருக்கிறீர்கள் என்றும் அறிக்கை செய்யுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4  ×  6  =