06-05-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்!
1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ,தேவன் தாம் தேர்ந்தெடுத்த ஜனமாகிய இஸ்ரவேலை பாபிலோனிலிருந்து விடுவிப்பதற்காகவும்,அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் சுதந்தரிப்பதற்காகவும் பெர்சியாவின் புறஜாதி அரசரான சைரஸை அபிஷேகம் செய்தார்.
தீர்க்கதரிசனமாகப் பார்த்தால் ,இன்று தேவன் நமக்கு கொடுத்த சுந்தந்திரத்தை பெறுவதற்கு வாக்குத்தத்தமாக இருக்கும்..
தேவன் சைரஸை அபிஷேகம் செய்தது போல், நசேரனாகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் செய்தார், அவர் நன்மை செய்து, பிசாசினால் ஒடுக்கப்பட்ட அனைவரையும் குணப்படுத்தினார், ஏனென்றால் தேவன் இயேசுவோடு இருந்தார் (அவரது வலது கையைப் பிடித்தார்) அப்போஸ்தலர் 10:38.
இன்று, அந்த அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு(கிறிஸ்து) கர்த்தராக உயர்ந்தவர் மற்றும் அவர் உங்கள் வலது கையைப் பிடித்து, பரிசுத்த ஆவியினாலும்,வல்லமையினாலும் உங்களை அபிஷேகம் செய்ய விரும்புகிறார்.
சைரஸ் ராஜாவுக்கும் மற்ற தேசங்களின் ராஜாக்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது இந்த அபிஷேகம்! இன்றும் கூட, அபிஷேகம்தான் உங்கள் சமகாலத்தவர்களிடமிருந்து – குறிப்பாக இந்த மாதம் மற்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும். அல்லேலூயா!
என் அன்பானவர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆட்சி செய்ய உங்களுக்கு பரிசுத்த ஆவியும் அவருடைய வல்லமையும் தேவை. மற்றவற்றிலிருந்து உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும் இந்த அபிஷேகத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் இன்று அதைப் பெறலாம்!
இயேசுவே சிலுவையில் கீழ்ப்படிவதன் மூலம் தேவனின் இந்த மிக வல்லமை வாய்ந்த பரிசைப்(பரிசுத்த ஆவியானவர்) பெற உங்களைத் தகுதிப்படுத்துகிறார்.
தேவனின் இந்த மாபெரும் பரிசை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இயேசு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கிய அவருடைய இரத்தத்தைச் சிந்தியதால் இந்த அபிஷேகம் வருகிறது.
ஜெபம்: அன்பான பரலோகத் தகப்பனே, இயேசுவின் ஜீவாதார பலியின் நிமித்தம் என் எல்லா பாவங்களையும் மன்னித்து, என்னை என்றென்றும் நீதியுள்ளவனாக்கியதற்கு நன்றி. இந்த அடிப்படையில்,பரிசுத்த ஆவியை வரமாகப் பெற நான் உங்களிடம் கேட்கிறேன். நான் இயேசுவை என் கர்த்தராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆமென் 🙏
.மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்
கிருபை நற்செய்தி தேவாலயம்!