07-05-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்று ஆளுகை செய்வோம்!
1.கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான் சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக ஆக்கியது. ராஜாவின் ஆளுகை அபிஷேகத்தில் இருந்து வருகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நீங்கள் வாழ்க்கையில் ஆளுகை செய்கிறீர்கள்.
நீங்கள் அபிஷேகம் செய்யப்படும்போதும்,தேவன் உங்கள் வலது கையைப் பிடிக்கும்போதும் மூன்று விஷயங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்:
1. எதிரியை பாதபடியாக்குதல்
2. எதிரிகளின் பலத்தை நிராயுதாமாக்குதல்
3. இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு -அரச வரவேற்புடன் நீங்கள் சிரமமின்றி நுழைதல் .
சைரஸின் வாழ்க்கையில் இதுதான் நடந்தது, இயேசுவின் நாமத்தில் உங்களுக்கும் இதுதான் நடக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மரணத்தை தாமே ஏற்றுக்கொண்டு உங்களுக்காக பாவமானார்,அதேபோல் இன்று அவருடைய நீதியைப் பெற்று நீங்கள் ஆளுகை செய்கிறீர்கள். சிலுவையில் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்,வாழ்க்கையில் ஆளுகை செய்வதற்கு தேவன் உங்களுக்கு அவருடைய நீதியை இலவசமாக வழங்கினார்.
சிலுவையில்,இயேசு உங்களுக்குத் தகுதியான பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டார்,அதே போல் அவருடைய பாவமற்ற வாழ்க்கை மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எப்போதும் முழுமையாக கீழ்ப்படிந்ததால் அவருக்குத் தகுதியான நீதியை இன்று நீங்கள் பெறுவீர்கள்.
நமக்குத் தகுதியானதை அவர் முழு மனதோடு பெற்றுக்கொண்டார்(ஏனெனில் நாம் தண்டனைக்கும் மரணத்திற்கும் மட்டுமே தகுதியானவர்கள்) எனவே,அவருக்குத் தகுதியானதை நாம் எதிர்பார்ப்போடு பெற வேண்டும்.அவை வாழ்வு, ஆரோக்கியம், நல்வாழ்வு, செல்வங்கள் உட்பட பரலோக மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள். இது தான் தெய்வீக பரிமாற்றம்!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று ஒப்புக்கொள்வதில் நீங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்களோ (கர்த்தராகிய இயேசுவுக்குத் தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள்), இயேசுவின் நாமத்தில் சிரமமின்றி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் ஆளுகை செய்ய அவருடைய அபிஷேகத்தையும் அப்படியே அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களைப் பெற்று நாம் ஆளுகை செய்வோம் .
கிருபை நற்செய்தி தேவாலயம்!