மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

gg

13-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

என் அன்பானவர்களே, உங்கள் ஒளி வந்தது!.உங்களுடைய டைய மேன்மைக்கான நேரம் வந்துவிட்டது! உங்கள் வாழ்வில் தேவன் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது! ஆம்,எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும் தேவனின் மகிமை உங்கள் வாழ்வில் காணப்படும்.

இருளின் நடுவில்,தேவனின் கிருபையும் தேவனின் நன்மையும் (அவருடைய ஒளி) வெளிப்படுகிறது!
பஞ்சத்தின் மத்தியில்,தேவனின் தங்கச்சுரங்கம் வெளிப்படுகிறது!
சோதனையின் மத்தியில்,தேவனின் வெற்றி வெளிப்படுகிறது!
உங்கள் சோகக் கதையின் நடுவே,தேவனின் மகிமை வெளிப்படுகிறது!

மனிதனின் மோசமான நேரம் தேவனின் சிறந்த நேரம்!நீங்கள் எந்த இருளினால் சூழ்ந்து இருந்தாலும், கர்த்தருடைய மகிமையால் இருள் முற்றிலும் மறைந்துவிடும்.இருளால் ஒருபோதும் ஒளியை வெல்ல முடியாது! அல்லேலூயா!!

என் அன்பு நண்பர்களே, கவலைப்படதிருங்கள்! இயேசு உங்களுக்கு முன் செல்கிறார். அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று, எல்லா கோணலானவைகளையும் நேராக்குகிறது.
நம்முடைய கர்த்தரும் நம்முடைய நீதியுமான இயேசுவின் நாமத்தில் அவருடைய மகிமை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5  ×  1  =