16-05-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்!
3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
4. சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். ஏசாயா 60:3-4 NKJV
நீங்கள் அவருடைய நீதியைத் தேடிப் பிடித்துக் கொள்ளும்போது,மக்கள் உங்களைத் தேடுவதையும், அதிகாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக உங்கள் நலனைத் தேடுவதையும் அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! இது நடப்பதற்குரிய உண்மையாக இருக்க மிகவும் நல்லது!
அதுமட்டுமல்லாமல் ,உங்கள் மகன்கள் மற்றும் மகள்கள்,(மகன்களைப் போன்றவர்கள் அல்லது மகள்கள் போன்றவர்கள்) உங்களுக்குத் திரும்பக் கிடைப்பார்கள்.உங்கள் வாழ்வில் உடைந்த உறவுகள் இயேசுவின் நாமத்தில் மீட்டெடுக்கப்படும்!
வேதத்தில் யோபு என்றழைக்கப்படும் ஒரு மனிதனைக் காண்கிறோம்,அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தார்,அவர் எல்லாவற்றிலும் அடிபட்டு இறக்கும் கட்டத்தில் இருந்தார். அவரது இழப்புக்கான காரணத்தை நாங்கள் ஆவிக்குரிய ரீதியில் புரிந்துகொள்ள முயற்சித்தால் ,யோபு தேவ நீதியிலிருந்து விலகியதே காரணம்.
இருப்பினும், கர்த்தர் முதலில் யோபுவின் வாழ்க்கையில் அவருடைய தேவ நீதியை கருணையுடன் மீட்டெடுத்தார், அதன் விளைவாக அவர் இழந்த அனைத்தையும் கர்த்தர் இரட்டதனையாக மீட்டெடுத்தார். யோபுவிடம் தவறு கண்டவர்கள் அவரிடம் பிரார்த்தனை மற்றும் மன்னிப்புக் கோரி வந்தனர்.அவருடைய சகோதரர்கள்,சகோதரிகள் மற்றும் முன்னாள் நண்பர்கள் அனைவரும் வந்து அவரை பொருள் ரீதியாக ஆசீர்வதித்து,அவருடன் விருந்துண்டனர் (யோபு 42:9-11).அதன் பிறகு அவர் நீண்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார், மேலும் அனைத்து பூமியிலும் அழகான மகள்கள் மற்றும் அழகான மகன்களைப் பெற்றார்.
என் அன்பானவர்களே, இது உங்கள் பங்கு! எதிர்பாராத ஒரு திசையிலிருந்து செல்வமும் புகழும் உங்களைத் தேடி வரும்.பேரும்,புகழும் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் வரும்.எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப்பெற்று எந்த நிபந்தனையும் இல்லாமல் இயேசுவுக்குத் தகுதியான அனைத்து நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.காரணம் நீங்கள் பெற தகுதியான அனைத்து தண்டனையும் இயேசு ஏற்றுக்கொண்டார். அல்லேலூயா ! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!