30-05-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.ரோமர் 6:14
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. கலாத்தியர் 5:18
ஆளுகையானது நியாயப்பிரமாணத்தின்படி இருக்கும் போது, பாவம் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் ,ஆவியானவர் ஆளுகை செய்யும் போது, விசுவாசி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை,எனவே பாவம் விசுவாசி மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை மேலும் நோய் மற்றும் வறுமை மீதும்கூட , அதாவது நியாயப்பிரமாணமும் ஆவியும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை. இரண்டில் ஒன்று எந்த நேரத்திலும் வேலை செய்யும் திறன் கொண்டவை .இருகாரியங்களும் அருகருகே அல்லது ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது. இதுவே ஒரு விடுதலையான வெளிப்பாடு!
மனிதனால் முடியாது என்பதையும் தேவன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் காட்டவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.தங்களுக்கு தானே உதவக்கூடியவர்களுக்கு தேவன் உதவுகிறார் என்றால், நமக்கு ஏன் தேவன் தேவை?
பத்து கட்டளைகளில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் “நீங்கள் இதை செய்யவேண்டும் மற்றும் நீங்கள் இதை செய்ய கூடாது ” என்று பட்டியல் செல்லும் , மனிதன் கடவுளைச் சார்ந்திருப்பதைக் காட்டும் மிக முக்கியமான அம்சமான “நீங்கள் ஜெபிக்க வேண்டும்” என்று எங்கும் குறிப்பிட வில்லை . நியாயப்பிரமாணத்தை மனிதனால் தன் பலத்தில் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபிப்பதே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததன் நோக்கம் என்பதை இது காட்டுகிறது.
எனவே, பரிசுத்த ஆவியானவரின் தோற்றம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் தேவையான பரிமாணமாகும்
பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், உங்களால் ஒன்றும் முடியாது,நீங்கள் இல்லாமல் அவரால் ஒன்றும் முடியாது! ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவன் பார்க்க விரும்பும் காரியம் – ஆவியானவர் மற்றும் நீங்கள் இருவரும் பிரிக்க முடியாத நபர்களாக இருக்கவேண்டும் .
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் (உங்கள் தற்காப்பு, தன்னம்பிக்கை, சுய முயற்சி)யை விடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் மீது இறங்கும்!
வீட்டுக்கொடுங்கள் மேலும் பரிசுத்தஆவி அசைவாடட்டும்! அப்போது நீங்கள் அமைதியை அனுபவிப்பீர்கள், உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள், வெற்றியை அனுபவிப்பீர்கள், இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!