மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

g20

31-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 45:2-3 NKJV.

கர்த்தராகிய இயேசுவின் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும்வேளையில்,இந்த மாதத்திற்கான வாக்குறுதியை நினைவு கூர்வதும், இந்த மே மாதம் முழுவதும் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற மற்றும் வல்லமைவாய்ந்த போதனைகளை சீர்தூக்கிப் பார்ப்பதும் தகுதியானது.

தேவனின் நீதி மட்டுமே வாழ்க்கையின் அனைத்து கோணலான பாதைகளையும் நேராக்க முடியும். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவது நமது செயலாலோஅல்லது கீழ்ப்படிதலாலோ அல்ல.மாறாக இயேசுவின் கீழ்ப்படிதல் சிலுவையில் உச்சக்கட்டத்தை அடைந்தது,அது மட்டுமே நமது எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை கொண்டு வர முடியும். அல்லேலூயா!

இரண்டாவதாக, அவருடைய கீழ்ப்படிதல் நம்மை என்றென்றும் தேவனுடைய பார்வையில் சரியான நிலைநிறுத்தம் செய்தது. இது நம் தந்தையாகிய ஆபிரகாமின் ஆசீர்வாதத்தைப் பெற நம்மைத் தகுதிப்படுத்தியுள்ளது. நாம் ஆபிரகாமின் சந்ததி, இந்த உலகத்தின் வாரிசு!.

மூன்றாவதாக,ஆவியானவர் நம் வாழ்வில் வருவார் என்ற வாக்குறுதி,நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லா வாக்குறுதிகளையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவதாகும். பரிசுத்த ஆவியானவருடனான நமது ஐக்கியம் மற்றும் நம் வாழ்வின் தலைவராக இருக்கும் உரிமையை அவருக்கு கொடுப்பது உலகக் காரியங்களில் சிறக்கச்செய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மீது வரும்போது,அவர் தம்முடைய வசனத்தை நமக்குத் தருவார்,நாம் புதிய பாஷைகளில் (அந்நிய பாஷை) பேசுவோம்.
*அந்நிய பாஷை என்பது தேவனின் மொழியாகும், இது சிறைச்சாலையின் ஒவ்வொரு இரும்புக் கம்பியையும் அறுத்து,தேவன்,நமக்குச் சிறந்ததை அனுபவிக்கத் தடையாக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைக்க உதவுகிறது ,மேலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் நிச்சயமாக நம்மைப் பெறச் செய்கிறது.

இந்த மாதத்தில் நம் வாழ்க்கையை மிகவும் அழகாக வழிநடத்தி,தேவன் நியமித்திருக்கும் இலக்கை அடைய உதவிய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் முழுவதும் என்னுடன் தியானிக்க இணைந்ததற்கு மிக்க நன்றி மேலும் வரும் மாதங்களிலும் இறைவனின் அருளால் இந்த சிறந்த பயணத்தை தொடர உங்களை ஊக்குவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93  −  88  =