மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

05-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

6. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
9. அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்து நின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.அப்போஸ்தலர் 16:6-7, 9 NKJV

நீங்கள் நினைத்தபடி காரியங்கள் உங்களுக்குச் செயல்படவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டும் என்று அர்த்தம்.

அப்போஸ்தலர் பவுலுக்கும் அவரது குழுவினருக்கும் இதுதான் நடந்தது! அவர்கள் முதன்முறையாக தேவனு டைய சித்தம் என்று எண்ணி முயற்சித்தார்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார்.பின்னர் அவர்கள் ஜெபத்துடன் வேறு வழியில் சென்றார்கள்,மீண்டும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை இந்த முறையும் அனுமதிக்கவில்லை,ஏனெனில் அது சரியான நேரம் அல்ல.

இறுதியாக அவர்கள் அமைதியாகி, ஓய்வெடுத்து, கடந்த காலத்தில் தேவன் அவர்களுக்கு வழங்கிய அனைத்து வழிகாட்டுதலுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தார்கள்,அநேகமாக அவர்கள் ஆவியில் ஜெபித்திருக்கலாம் (அந்நிய பாஷைகளில்- பரலோக மொழியில்) அப்போது திடீரென்று ஒரு தரிசனம் தோன்றியது – எங்கு செல்ல வேண்டும் மற்றும் எப்படி தொடர வேண்டும் என்ற வழிகாட்டுதல் உண்டாகியது.
என் அன்பானவர்களே,அதே வழியில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழி காட்டுவார். மகிமையின் ராஜாவைப் பற்றி அறிய,ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியால் அவர் உங்கள் புரிதலின் கண்களைத் திறப்பார்.

நம் கண்களுக்கு காட்டப்படுவது பரிசுத்த ஆவியானவரால் வந்ததா என்பதை எவ்வாறு பகுத்தறிவது?
அதற்கு பதில் தேவ தயவு (FAVOUR)! தேவ தயவானது நிபந்தனையற்ற, தகுதியற்ற,பரிசாகும்! அல்லேலூயா!

நீங்கள் அவருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது, ​அவர் உங்களை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்.
அவரது கூட்டில் ஓய்வெடுங்கள், உங்கள் ஆத்துமா வெறுக்கும் எதிரிகளை நீங்கள் சந்திக்காதபடி, அவர் தனது சிறந்ததை உங்களுக்குக் காண்பிப்பார்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.நீங்கள் ஆபிரகாமின் சந்ததி.நீங்கள் ஆபிரகாமை விசுவாசித்து, ஆவியின் வாக்குத்தத்தத்தைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் உலகின் வாரிசாக இருக்கிறீர்கள்.உங்கள் எதிரிகள் அனைவரையும் பாதபடியாக்கி உங்கள் ஆஸ்திகளை இன்றே நீங்கள் இயேசுவின் நாமத்தில் சொந்தமாக்குவீர்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  3  =  6