06-06-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!
11. பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
12. இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.ஏசாயா 28:11-12 NKJV
நீங்கள் அவருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது,அவர் உங்களை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வார். ஓய்வு என்றால் ஆவியின் வழிநடத்துதலின் செயல்பாடு!ஓய்வு என்பது சோம்பலுக்கு வழிவகுக்கும் செயலற்ற நிலை அல்ல. .
உங்களைச் சுற்றியுள்ள இளைப்பாறுதலை விட (உங்கள் சூழ்நிலையில்),நீங்கள் எதிர் நோக்க வேண்டியது உங்களுக்குள் இருக்கும் இளைப்பாறுதல் ஆகும்.
படகைச் சுற்றிலும் சுழற்காற்றும்,கொந்தளிப்பும் ஏற்பட்டபோது,படகையே கவிழ்த்துவிடும் அபாயம் இருந்தது,இயேசு படகின் பின்புறத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்,அவருடைய சீஷர்கள் அனைவரும் படகு மூழ்காமல் இருக்க கடினமாக உழைத்தார்கள். கொந்தளிப்பான காற்று மற்றும் சீற்றம் கொண்ட அலைகளால் அலைக்கழிக்கப்பட்டனர். இயேசு முதலில் அவர்களை அமைதிப்படுத்தி, பின்னர் கடலை அமைதிப்படுத்தினார். (மத்தேயு 8:23-26).
அந்நியபாஷைகளில் பேசுவது -பரலோக மொழி, உங்கள் மனதையும் உங்கள் முழு உடலையும் அமைதிப்படுத்துகிறது. இது தான் இளைப்பாறுதல் – இது ஆவியின் வழிநடத்துதலுக்கேற்ற செயல்பாடு.
இயேசுவின் மரணம்,அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் மகிமையின் ராஜாவாக மகிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பவும், ஆவியின் அந்நிய பாஷயை உங்களுக்கு வழங்கவும் தேவனிடம் கேளுங்கள். அந்நியபாஷைகளில் பேசும் இந்த வரத்தை நம்புங்கள் மற்றும் விசுவாசத்துடன் அதை பெற்றுக்கொண்டு பேசுங்கள், நீங்கள் புரிந்து கொள்ளாத வேறொரு மொழியைப் பேசுகிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.
அறியப்பட்ட மொழியைப் பேசுவதிலிருந்து அறியாத மொழிக்கு மாறுவதற்கான சிறந்த வழி, அந்நிய பாஷைகளின் வரத்தைக் கேட்பதாகும் . நீங்கள் பரிசாகப் பெறும் இந்த அந்நிய பாஷையை வாய்மொழியாகப் பேசவேண்டும். இந்த பரிசுக்காக அவருக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் ,_கிறிஸ்து இயேசுவில் நீங்கள் தேவனின் நீதி என்று ஒப்புக்கொண்டு,ஒப்புக்கொள்வதை அறிக்கைசெய்து நீங்கள் இவற்றைச் சொல்லும்போது, *உங்கள் இதயத்தில் இருந்து வரும் சொற்களின் எழுச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இதுவே நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான அடையாளம் – உங்கள் மனம் புரிந்துகொள்ள முடியாத பரலோக மொழியை பேசுகிறீர்கள் அதனால் நீங்கள் நிச்சயமாக ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அனுபவிப்பீர்கள். இயேசுவின் பெயரில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட உங்கள் ஆசையை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்!