மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

08-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். I கொரிந்தியர் 2:9-10 NKJV

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய். தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்)உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,உங்கள் சமகாலத்தவர்களை விட உங்களை உயரச் செய்யும்.

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த ஆன்மீக உணர்வுகளை நம்மில் எழுப்பி பாதுகாக்க முடியும். ஒரு விசுவாசியின் வெற்றி இந்த ஆன்மீக உணர்வுகள் எழும்பி தேவனோடு நம்மை இணைப்பதால் தான். பரிசுத்த ஆவியியானவரோடு இருக்கும் ஐக்கியமே இதை செய்கிறது!

எந்தவொரு மனிதனும் தேவனிடமிருந்து பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு பரிசுத்த ஆவியாகிய நபர்தாமே.அவர் பிதாவாகிய தேவனின் தனிப்பட்ட பொக்கிஷமாயிருக்கிறார்.

தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய பரிசுத்த ஆவியை அருளுவதில் பிதா மகிழ்ச்சியடைகிறார்,ஏனென்றால் கர்த்தராகிய இயேசு பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை (பாவத்தால் உண்டாக்கப்பட்ட) தன் மீது சுமந்து கொண்டு அதை முற்றிலுமாக சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

கல்வாரியில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டு அதன்மூலம் பரிசுத்த ஆவியானவர்,இப்போது விசுவாசிக்கிற ஒவ்வொருவரின் இதயத்திலும் என்றென்றும் வசிக்க வழிசெய்தது.
விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் நபரை அங்கீகரிக்கவும், அவருடைய வழிகாட்டுதல் (ஞானம்) மற்றும் கைரோஸ் (புரிதல்) எனப்படும் அவரது நேரத்திற்காகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும்போது அது மனித எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாகவும்,மனித கற்பனைக்கும் மனித புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கும்.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தேவனுடைய நீதியின் அடிப்படையில் செயல்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டு,அனைத்து மனிதகுலத்திற்கும் இலவச பரிசாகக் கொடுக்கப்படுகிறது, எனவே, “நான் கிறிஸ்துவுக்குள் தேவநீதி ” என்று நம்பி ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யும்போது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களில் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள்!
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம்  !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  2  =  1