மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

13-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

1. இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 32:1,17 NKJV

கர்த்தராகிய இயேசு சிலுவையில் நமக்காகச் செய்தவற்றின் நிமித்தம் நாம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நீதிமான்களாய் இருக்கிறோம் என்பது நமது நிலைப்பாடு. மனிதகுலத்திற்காக அவர் அனுபவித்த துன்பம், பரிசுத்த தேவனின் நீதியின் பிரமாணங்களை திருப்திப்படுத்தியது.நம்மீது சுமத்தப்பட்ட மரண தண்டனை இயேசு கிறிஸ்துவின் மீது வந்தது. அவருடைய இரத்தத்தால் நாம் மன்னிக்கப்பட்டு,கழுவப்பட்டு, என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம்.
இது தேவனின் பார்வையில் நம் நீதியின் நிலைப்பாடு -முற்றிலும் மன்னிக்கப்பட்டு,கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா!!

இருப்பினும்,தேவனால் சுமத்தப்பட்ட இந்த நீதியின் விளைவும்,விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் அது செயல்படுவதும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவராலன்றி, இரட்சிப்பு,பரிசுத்தமாக்குதல், குணப்படுத்துதல், தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவித்தல் அல்லது வேறு எந்த ஆசீர்வாதமாக இருந்தாலும் இயேசு நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை உணராதிருந்தால் நாம் ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரே இயேசுவின் நிமித்தம் தேவனின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுபவ ரீதியாக நம்மில் நிஜமாக்குகிறார். அல்லேலூயா!

நாம் தேவ பரம்பரையின் சட்டப்பூர்வ வாரிசாக இருக்கலாம்,ஆனால் அதை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. நமது வேத புரிதல் மற்றும் நமது பிரசங்கத்தில் நாம் கோட்பாட்டு ரீதியாக பரிபூரணமாக இருக்க சாத்தியமாயிராது, ஆனால் அவற்றை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கமுடிகிறதில்லை.இதற்கு முக்கிய காரணியே பரிசுத்த ஆவியானவர்தான்.அவர் தான் நம் அறிவுக்கும்,அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்க்கும் பாலமாக செய்லபடுகிறார்.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை அறியமட்டுமில்லை,ஆனால் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் அழைக்கவும்.எல்லா விஷயங்களிலும் அவரை ஈடுபடுத்தி வெற்றி பெறுங்கள். அவருடைய வல்லமையை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை இருக்கிற வண்ணமாகவே இருக்காது! நீதிமான்களாக்கப்பட்ட நாம் மகிமைப்படுத்தப்படுவோம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6  ×  1  =