27-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் வாழ்க்கையின் இலக்கைத் தெளிவாகப் பாருங்கள்!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும், மகிமையின் தகப்பனுமாகிய அவர், அவரை அறிகிற அறிவில் ஞானத்தையும் வெளிப்பாட்டின் ஆவியையும் உங்களுக்குக் கொடுப்பார்“;
எபேசியர் 1:17-18aNKJV
எந்தவொரு மனிதனுக்கும் மிகப்பெரிய சங்கடம் அல்லது துரதிர்ஷ்டம் அவனது தஇலக்கைத் தீர்மானிக்கும் தருணத்தை நழுவ விடுவதுதான்.அதற்கு காரணம் அவனுக்கு முன்னால் இருக்கும் ஆசீர்வாதத்தை அவனால் பார்க்க முடியாமல் இருப்பதுதான். அவனது திருப்திக்கான தேடுதல்,அவனது கனவு நனவாகும் தருணம் வேறு என்று கருதுகிறான்.மனிதன் திருமணத்திற்கு வெளியே தனது திருப்திக்காகவும்,தனது களத்திற்கு வெளியே தனது அதிர்ஷ்டத்திற்காகவும்,வேறொருவரிடமிருந்து தனது ஆஸ்திவரும் என்று தேடுகிறான்.
ஆபிரகாம்,யோசேப்பு மற்றும் பவுலை வழிநடத்தியது போல் பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு நபரை பசுமையான மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,ஆனால்*அவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்தித்த பிறகு தான் அவர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் நிகழ்ந்தன.எனவே விரக்தி, ஏமாற்றம்,மற்றும் வனாந்தரம் அல்லது குருட்டுத்தன்மை போன்றவற்றின் இடத்தில் கடந்து செல்லும் நமக்கு மகிமையின் ராஜா நம் மனக்கண்களை திறக்கத் துடிக்கிறார் என்பதை மனதில் கொண்டு அவரோடு ஒரு சந்திப்பிற்காக நாம் வேண்டுவோம்.
என் அன்பானவர்களே, உங்கள் குறையில் தேவன் உங்களை சந்திக்கிறார்.
உங்கள் நோயில் அவர் உங்களை சந்திக்கிறார்.உங்களது விரக்தியிலும்,தோற்றுப்போன சூழ்நிலையிலும் ,பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முன்னால் இருக்கும் விடுதலையைக் காண்பிப்பார். அது ஆகாருக்கு நடந்ததைப் போலவே,தேவன்,பாலைவனத்தில் இறக்கும் தன் மகனைக் காப்பாற்ற அவள் கண்களை தண்ணீரைப் பார்க்க திறந்ததுபோலவே இயேசுவின் நாமத்தில் இன்று உங்கள் கண்களையும் திறப்பாராக.
ஜெபம்: என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே,மகிமையின் பிதாவே,உங்களைக் காண ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குத் தந்தருளும்.ஏழ்மையில் செழுமையையும், குறையில் மிகுதியையும்,நோயில் குணமடைவதையும்,முட்டாள்தனத்தில் ஞானத்தையும்,அதிருப்தியில் திருப்தியும் மகிழ்ச்சியையும் காண என் மனக்கண்களை திறந்தருளும் .இதை நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் வாழ்க்கையின் இலக்கைத் தெளிவாகப் பாருங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!