மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

30-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.ஏசாயா 32:1 NKJV
11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12. அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். எரேமியா 1:11-12 NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில்,இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான அவரது வாக்குறுதியை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன், ராஜா நீதியில் ஆட்சி (RIGTEOUSNESS) செய்வார்,அவருடைய இளவரசர்கள் நியாயம்(JUSTICE) செய்வார்கள்.
என் அன்பான நண்பர்களே, நாம் காரியங்களை இயற்கை உலகில் பார்ப்பதற்கு முன்,ஆன்மீக உலகில் பார்க்க வேண்டும்,ஏனென்றால் எல்லாமே இந்த உயர்ந்த மண்டலத்திலிருந்து தான் தொடங்குகின்றன.
ஆகையால்,அப்போஸ்தலன் பவுல் விசுவாசிகளுக்காக மனக்கண்கள் திறக்கும் ஞானத்திற்காக ஜெபித்தார்,இது நமக்காகவும் நம் அன்புக்குரியவர்களுக்காகவும் இன்று நம்முடைய ஜெபமும் கூட.

“நீ எதை காண்கிறாய்” என்று தேவன் எரேமியாவிடம் கேட்டபோது, ​அவர் ஆன்மீக உலகில் கண்டதை கூறினார்.தேவன் பார்த்த பிரகாரமே எரேமியாவும் பார்த்ததால்,தேவன் அவனுடைய விசுவாசத்தை ஏற்று தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.
இன்று உங்கள் வாழ்க்கையிலும் இது நடக்கும்! நீங்கள் ஒடுக்கப்பட்டிருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கை,உங்கள் சுற்றுப்புறம்,உங்கள் பணியிடம் மேலும் உங்கள் நாட்டில் இவை அனைத்திலும் உங்களுக்கு அநீதியான காரியங்கள் நடக்கலாம்.ஆனால், தேவன் மிக விரைவில் விஷயங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சாதகமாக திருப்புவார்! அது உறுதி!!
இயேசு கிறிஸ்து மகிமையின் ராஜா,அவர் நீதியில் ஆட்சி செய்கிறார்,எனவே அவருடைய பிள்ளைகள் இயேசுவின் நாமத்தில் நியாயத்துடன் ஆட்சி செய்வார்கள்!

இந்த மாதம் முழுவதும் நம்மோடு அவர் பேசிய மற்றும் எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் மிகவும் பிரமாதமாக நம்மை வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி மற்றும் துதிகளை ஏறெடுக்கிறேன்.
‘இன்று உங்களுக்கான கிருபை’என்ற தின தியானத்தை படிக்கவும், தியானிக்கவும் என்னுடன் தினமும் இணைந்ததற்கு நன்றி.
வரும் செப்டம்பர் மாதத்திலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரோடும்,என்னோடும் இணைந்திருங்கள் .
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75  −    =  73