31-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்!
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17NKJV
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்குள் வரும்வேளையில் , இந்த மாபெரும் மற்றும் அற்புதமான உண்மையை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன் – நீங்கள் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள உங்கள் கனவுகள் மட்டுமல்ல நீங்கள் நினைத்து பார்க்க முடியாத கனவுகளை சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவன் உங்களுக்கு செய்கிறார்.
ஒவ்வொரு காலையிலும்,நம் மூலம் விரும்பிய வெளியீட்டைக் காண அனைவருக்கும் முதலாக சரியான உள்ளீடு தேவைப்படுகிறது.
எந்த நிபந்தனையின்றி,உங்கள் முயற்சியோ,உழைப்போ இல்லாமல்,அளவில்லாமல் இலவசமாகக் கொடுக்கப்படும் அவருடைய கிருபையே உங்கள் உள்ளீடாக இருக்க வேண்டும்.அவருடைய கிருபையை பெறுவது,உங்களை முழுவதுமாக நிரப்புகிறது மற்றும் நிரம்பி வழிகிறது உங்கள் மூலம் சுற்றியுள்ள மக்களையும் ஆசீர்வதிக்கிறது!
தேவனுடைய பார்வையில் இன்று நீங்கள் நீதிமான்களாக திகழ்வது இயேசு உங்களுக்கு இலவசமாக கொடுத்த நீதியின் வரத்தின் மூலம் ஆகும். (அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் பிதாவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்ததே அந்த நீதியாகும் ).ஆகவே இந்த நீதியை அறிக்கையிடும்போது உடனடியாக இல்லாவிட்டாலும் நிச்சயமாக ஒரு நாள் அவர் நீதியோடும் என் செயல்கள் பொருந்தும்.ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே அந்த கிரியையை எனக்குள் நடப்பிக்கிறார்.
இந்த ஜூலை மாதம் முழுவதும் நம் அனைவரையும் மிகவும் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையின் தியானத்தில் என்னுடன் சேர்ந்து, உங்களின் பொன்னான நேரத்தை ஓதுக்கியதற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தர் தம்முடைய நீதியில் உங்களை நிலைநிறுத்தி, இயேசுவின் நாமத்தில் அவருடைய நிரம்பி வழியும் கிருபையால் உங்களைத் திருப்திப்படுத்துவாராக!
வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் அற்புதமான வெளிப்பாடு மற்றும் அபிஷேகத்திற்காக இயேசுவின் நாமத்தில் என்னுடன் இணைந்திருங்கள்.ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை நற்செய்தி பேராலயம் !!