மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

06-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது எதிர்க்காற்றுகள் அனைத்திலிருந்தும் உங்களை மறைக்கிறது.
கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, ஒவ்வொரு கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்தும் உங்களை மூடுகிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதியானது உங்களுக்குள் இருந்து ஜீவத்தண்ணீரின் ஆறுகளை ஓடச் செய்கிறது,நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களைச் செழிக்கச் செய்கிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதி என்பது ஷெக்கினா மகிமை மேகமாகும்,இது உங்கள் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் குறிப்பாக உங்கள் வனாந்தர பயணத்தின் போது உங்களைச் சூழ்ந்துகொள்ளும் கர்த்தர்,இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியேறும் போது மேகத்ஸ்தம்பமாக முன்சென்றது போல உங்கள் வாழ்க்கையிலும் முன் செல்வார்.

ஆம் என் பிரியமானவர்களே, இந்த வாக்குறுதிகள் உங்களுடையது, நீங்கள் நிச்சயமாக இந்த மாதம் இயேசுவின் நாமத்தில் சாட்சியாக எழும்புவீர்கள்!

உங்கள் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்று இயேசு சிலுவையில் உங்களுக்காக தியாகம் செய்து என்றென்றும் நீதிமானாக்கியதால் அவரில் அடைக்கலம் பெறுங்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்ற உணர்வு, அவமானம், தனிமையின் அச்சுறுத்தல், ஊக்கமின்மை மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது – மேலே கூறப்பட்டுள்ளபடி இந்த ஆசீர்வாதங்களை அறிக்கையிட்டு சொல்லுங்கள்,அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இதைத் தவறாமல் செயல்படுத்துவார். ஆமென் 🙏

மனிதனால் அடையப்பட்ட நீதியில் அல்ல,தேவனின் தயவில் மட்டுமே நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்ட நீதியைக் காண்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  ×  9  =  9