21-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் நீதியில் தயவைப் பெறுங்கள்!
8. கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
12. கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர். சங்கீதம் 5:8, 12 NKJV
என் அன்பானவர்களே, இந்த வாரமும் இதுவே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும்! தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாகத் தம்முடைய நீதியின் வழியைக் காட்டத் தயாராக இருக்கிறார், இந்த வாரத்தில் இயேசுவின் நாமத்தில் நீதியின் பாதையில் தயவால் ஒரு கேடயத்தைப் போல உங்களைச் சூழ்வாராக! ஆமென்
ஆம் என் பிரியமானவர்களே, நாம் தேவனுடைய நீதியின்படி தேவனிடம் ஜெபிக்கும்போது உங்களுடைய ஜெபங்கள் எதிர்ப்பு இல்லாமல் அவரிடம் போகும். அவருடைய நீதியில் மட்டுமே,உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராகப் போராட முடியாது. அகவே, இயேசுவின் நீதியான செயல்களின் அடிப்படையில் நமது கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் தேவனிடம் முன்வைப்பது மிகவும் முக்கியம்.
நம்முடைய பல ஜெபங்கள் தேவனுக்கோ அல்லது மனிதர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், இயேசு நமக்காகச் செய்தவற்றின் அடிப்படையில் நாம் பிதாவிடம் ஜெபிக்கும்போது,அவருடைய தயவை மிகுதியாக அனுபவிக்கிறோம்.அவருடைய தயவு இயேசுவின் தகுதியை அடிப்படையாகக் கொண்டது, என்னுடையது அல்ல. அவருடைய தயவு இயேசுவின் கீழ்ப்படிதலை அடிப்படையாகக் கொண்டது, என்னுடையது அல்ல. மோசேயின் நியாயப்பிரமாணம் கோரிய அனைத்து நிபந்தனைகளையும் இயேசு நிறைவேற்றியதால் அவருடைய தயவு எனக்கு நிபந்தனையற்றது. ஆமென்
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்! எனவே, உழைத்துப்பெற முடியாத, நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்ற கிருபை இன்று உங்களை ஒரு கேடயமாகச் சூழ்ந்துள்ளது! ஆமென்
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் நீதியில் தயவைப் பெறுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை(பு) நற்செய்தி பேராலயம்!!