மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆளுகை செய்யஅவருடைய நீதியை பெருங்கள்!

g18

24-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆளுகை செய்யஅவருடைய நீதியை பெருங்கள்!

30. இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
31. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.ரோமர் 9:30-32NKJV

இங்கே நாம் இரண்டு மாறுபட்ட மற்றும் எதிர் மறையான நீதிகளைக் காண்கிறோம் – 1. கிறிஸ்து மனிதனுக்காகச் செய்ததை நம்புவதன் மூலம் வரும் நீதி,
2. மனித முயற்சிகளால் வரும் நீதி (தேவனின் பரிசுத்தத்தின் உயர் தரத்தை அடைய வீணான மனித முயற்சி).

ஆதாம்,ஏவாளின் பாவத்தின் மூலம் வீழ்ச்சியடைந்த சுபாவத்தின் காரணமாக, மனிதன் தேவனின் தரத்தை சந்திக்க இயலாமல் போனது.தேவனின் நீதியை அடைய ஒரே வழி இயேசுவை நம்புவதே.இதுவே மனிதகுலத்திடம் தேவன் விடுக்கும் வேண்டுகோள்.
முதல் சகோதரர்கள் – காயீன் மற்றும் ஆபேல், இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு; ஏசா மற்றும் யாக்கோபு மற்றும் பலர் தொடங்கி வரலாறு முழுவதும் இந்த இரண்டு மாறுபட்ட நீதியை தேவன் நமக்கு வெளிப்படுத்தினார்;

நம்முடைய கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்த நாட்களில், “கெட்ட குமாரன்’ என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு உவமையை அவர் மேற்கோள் காட்டினார், அங்கு மூத்த சகோதரன் தனது தந்தையுடன் நெருக்கமாக வீட்டில் இருந்தான், இளைய மகன் ஊதாரித்தனமான காரணத்தால் தந்தையிடமிருந்து வெகு தொலைவில் இருந்தான். இருந்தாலும், தந்தையின் அதீத அன்பின் காரணமாக அவன் நெருக்கமாக இழுக்கப்பட்டான்.

கர்த்தராகிய இயேசுவின் இந்த உவமை ஒரு கதை மட்டுமல்ல,ஒரு தீர்க்கதரிசனக் குரலாக இருக்கிறது: தேவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இஸ்ரவேலர் அவரிடமிருந்து வெகுதூரம் போனார்கள், ஆனால் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருந்த (புறஜாதிகள் ) மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். அவர்களே இன்று விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அல்லது விசுவாசிகள் என்று அறியப்படுகிறார்கள், அவர்கள் மனிதகுலத்திற்காக இயேசு செய்த சிலுவைத் தியாகத்தை நம்புகிறவர்கள்.

என் அன்பானவர்களே, தேவனுடன் சரியான நிலைப்பாடு அல்லது தேவனின் நீதி என்பது எனது சரியான செயல் அல்ல, மாறாக எனது சரியான விசுவாசத்தைக் குறிக்கிறது. தேவனின் தரநிலை மாறாதவை. இயேசு வந்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, உலகத்தின் எல்லா பாவங்களையும் நீக்கினார். அவருடைய கீழ்ப்படிதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை மனிதகுலத்திற்த்தின் சார்பாக தேவனின் முன் நின்று தேவ  ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமையை அளித்தன.
சாதி, மதம், நிறம், பண்பாடு, சமூகம், நாடு அல்லது கண்டம் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் இது இறைவனின் வெகுமதி.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவன் உங்களை எப்போதும் கிறிஸ்துவில் நீதிமான்களாகப் பார்க்கிறார் என்று நம்புவதுதான். அப்பொழுது, உங்களுக்கு தகுதியில்லாத ஆசீர்வாதங்கள் தானாகவே உங்களை எப்போதும் தேடி வரும். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,என்றென்றும் ஆளுகை செய்ய அவருடைய நீதியை பெருங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *