25-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியில் மகிமைப்படுங்கள்!
33. இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ரோமர் 9:33,10-4NKJV
தேவனின் நீதியானது ‘கொள்கைகளை’ அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக அவருடைய நீதி இயேசு கிறிஸ்து எனப்படும் ‘நபரை’ அடிப்படையாகக் கொண்டது. அல்லேலூயா!
விதிகள்,ஒழுங்குமுறைகள்,கொள்கைகள் மற்றும் சட்டம் ஆகியவை மதரீதியாகவும், கருத்தாகவும் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது தேவனின் கிருபையை அடைய போதுமானதாக இல்லை.ஆனால், நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, ரோமர் 8:4-ல் எழுதப்பட்டுள்ளபடி, பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தில் அவருடைய நீதியைச் செயல்படுத்த தொடங்குகிறார்- “நியாயப்பிரமாணத்தால் நீதியான கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்த்தர் நம்மில் நிறைவேற்ற்றுகிறார். அப்பொழுது மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறோம்.
நம்மில் குடியிருக்கும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் கீழ்ப்படிதல், அவருடைய பரிசுத்தம், அவருடைய ஆரோக்கியம், அவருடைய ஞானம் மற்றும் எல்லாவற்றையும் நம்மில் செயல்படுத்துகிறார்.
நியாயப்பிரமாணம், சரியானதாக இருந்தாலும்,நம்மில் நீதியை வெளிப்படுத்துவதில் உருவகப்படுத்துவதாக இருந்தால்,அது தேவனின் தரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நம்மை அழுத்துகிறது ஆனால், பரிசுத்த ஆவியானவர் தெய்வீக நபராக இருப்பதால்,நியாயப்பிரமாணத்தின் தேவையை நம்மில் நிறைவேற்ற ஒரு விசுவாசிக்கு பெலன் அளிக்கிறார் மற்றும் விசுவாசிக்குள் அதை முழுமையாக நிறைவேற்ற்றவும் செய்கிறார், ஆகையால் அவர் கிருபையின் மூலம் நாம் அதை மீறுகிறோம் .
அவர் சத்திய ஆவியானவர் மற்றும் சத்தியத்திற்கு சாட்சியாக இருக்கிறார்.
சத்தியம் என்பது என்ன? இயேசுவின் சிலுவையின் பலியின் காரணமாக தேவன் உங்களை என்றென்றும் நீதியுள்ளவர்களாகக் காண்கிறார். “நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்.” அவருடைய நீதியை நம்மில் நிறைவேற்றுகிறார், எனவே நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள்.
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்த எங்களை வழிநடத்தும் எங்கள் நீதியான இயேசுவுக்கும் மற்றும் அந்த நீதியில் வழிநடத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியில் மகிமைப்படுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!!