07-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ஆளுகை செய்ய நீதியைப் பெறுங்கள்!
8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6:8-10 NKJV
ஜெபிப்பதற்கான சிறந்த வழி – நீங்கள் விரும்புவதைச் செய்ய தேவனை பயன்படுத்தாமல்,மாறாக ,-அவர் உங்களிடமிருந்தும் உங்கள் மூலமாகவும் தாம் விரும்புவதைச் செய்யும் தேவனின் கருவியாக மாறுவது ஆகும்.
உங்களுக்குத் தேவையான விஷயங்களை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார் என்ற புரிதலுடன் தேவனை அணுகுவது முதல் மற்றும் முக்கிய முன்னுரை ஆகும்.
ஜெபங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்காதபோது அல்லது பதில் இல்லாமல் விஷயங்கள் தாமதமாகும்போது அல்லது பதில் முற்றிலும் இல்லாமல் போகும் போது – தேவன் பதிலளிக்கவில்லை அல்லது அது தேவனின் விருப்பம் இல்லை என்று முடிவு செய்வது மிகவும் தவறான கருத்தாகும்.
விவேகம் என்பது உங்களுக்கு போதிக்கப்பட்ட அனைத்தையும் உபயோகித்து நீங்கள் விரும்பிய பலன் இல்லாமல் எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்தபின் தேவனின் உதவியை நாடுவதாகும். அவருடைய உதவியை நாடுவது என்பது அவருடைய ராஜ்யம் வர வேண்டும் என்று பொருள்படுகிறது.
“உமது ராஜ்யம் வருவதாக” என்பது பிரார்த்தனைகளின் தலையாய பிரார்த்தனை! இது தேவை என்று நாம் நினைப்பதற்கு மேல் நம் வாழ்வில் முதன்மை பெறுகின்ற தேவனின் நோக்கத்தில் கவனம் செலுத்துகிறது.
பூமியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் (INFLUENCIAL PEOPLE) தங்கள் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு பதில் பெறவேண்டும் என்பதை அறிந்தவர்களே ஆவர்!
பரிசுத்த ஆவியானவர் மட்டுமே பதில் அளிக்கப்பட்ட அனைத்து ஜெபங்களும் எப்படி ஏறெடுக்கப்படவேண்டும் என்பதை அறிந்தவராகும்!
பதில் அளிக்கப்பட்ட ஜெபங்களுக்கு “மூலக் காரணமானவர்” இயேசு கிறிஸ்து மட்டுமே.
அனைத்து பதில்களும் வரும்”ஆதாரம்” ( SOURCE) பிதாவாகிய தேவன்.
என் அன்பானவர்களே, மேற்கண்ட அடிப்படைகளை உங்கள் இதயத்தின் மையத்தில் வைத்திருங்கள், இதன் மூலம் ஒவ்வொரு எதிர்ப்பும் தேவனின் பார்வையில் ஆதாரமற்றதாகிவிடும், மேலும் நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்கும்.
ஆகையால், முதலில் அவருடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், மற்றவை அனைத்தும் உங்களுக்கு கூட கொடுக்கப்படும். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ஆளுகை செய்ய நீதியைப் பெறுங்கள்.
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!