12-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, அவருடைய நீதியிலும் கிருபையிலும் அவரோடு ஆளுகை செய்யுங்கள்!
1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 NKJV
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்துதல் 1:18 NKJV
“உமது ராஜ்யம் வருவதாக!”அப்படியென்றால் ,ஒரு ராஜ்யத்திற்கு நிச்சயமாக ஒரு ராஜா இருப்பார். அதுபோலவே, தேவனுடைய ராஜ்யம் வரும்போது,மகிமையின் ராஜா அரியணையில் அமர்வதற்கு வருகிறார். உங்கள் இதயம் அவருடைய சிம்மாசனமாக இருக்கும்!
உலகில் மற்ற ராஜ்ஜியங்களைப் போலல்லாமல், அவருடைய ராஜ்யம் மட்டுமே வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் உங்களுக்குப் பயனளிக்கிறது. இது நடக்க, உங்கள் உடல் ஒரு ஜீவ பலியாக படைக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜா சிம்மாசனத்தில் இருக்க வேண்டும் என்றால், நீங்களும் நானும் ஜீவபலியாக பலிபீடத்தின் மீது படைக்கப்பட வேண்டும் என்று பொருள்படுகிறது.
‘ஒரு ஜீவபலி’ என்றால் மரித்தாலும் இன்னும் சதாகாலங்களிலும் வாழ்கிறேன் என்று அர்த்தமாகிறது. இந்த கூற்றைப் புரிந்தால் மகிமையின் ராஜாவின் வார்த்தைகள் இன்னும்நிறைய அர்த்தமுள்ளதாக தோன்றும். “நான் மரித்தேன், இதோ நான் என்றென்றும் சதாகாலங்களிலும் வாழ்கிறேன்.”
அதுபோலவே, கர்த்தர் கிருபையுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்திருந்தால்(புது சிருஷ்டியாக), அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (ரோமர் 6:6,11). ‘மேலும் ஒரு உயிருள்ள தியாகம்’ என்றால், நீங்கள் பலிபீடத்தில் படைக்கப்பட்டு, கிறிஸ்துவுடன் உங்கள் பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டதாக எண்ணுவதாகும். அதுவே, நீங்கள் கிறிஸ்துவில் தேவ நீதியாக இருக்கிறீர்கள்! (புதிய சிருஷ்டியாகிறீர்கள்) என்பதாகும்.
நீங்கள் நியாயபிரமானத்திற்கு (சட்டத்தின் கோரிக்கைகளுக்கு) மரித்தீர்கள் ஆனால் பரிசுத்த ஆவிக்கு உயிருடன் இருக்கிறீர்கள் (அவர் எல்லா கோரிக்கைகளையும் விட அதிகமாக வழங்குகிறார்), இப்போது ராஜாவின் மணவாட்டி ஆனதால், நீங்கள் அவருடன் சமமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் (ரோமர் 7:4 மற்றும் 8:2). ஒரு ஜீவபலி’ என்றால், நீங்கள் பலிபீடத்தில் படைக்கப்பட்டு, நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாமல், கிருபையின் கீழ் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. அப்போது, உங்கள் மீதான அனைத்து கோரிக்கைகளையும் ராஜாவிடம் ஏற்றி, பரிசுத்த ஆவியின் மூலம் ராஜாவிடமிருந்து ஏராளமான கிருபையைப் பதிவிறக்கம் செய்கிறீர்கள்.
ஏராளமான கிருபையையும் நீதியின் வரத்தையும் பெறுபவர்கள் இயேசுவின் மூலம் வாழ்க்கையில் ஆளுகை செய்வார்கள்- மகிமையின் ராஜாவுக்கு ஸ்தோத்திரம்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியிலும் கிருபையிலும் அவரோடு ஆளுகை செய்யுங்கள்.
பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!