மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

18-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6-9,10 nkjv

என் பிதாவுக்கு பிரியமானவர்களே,நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்த பிரதான ஜெபமானது பிதாவின் ராஜ்யத்தை அழைப்பதை வலியுறுத்துகிறது. இருப்பினும் ஜெபமானது, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே..” என்று தொடங்குகிறது.

பரலோக ராஜ்யம் பூமியில் முக்கிய பங்கு வகிக்கிகிறது,எனவே,எல்லா வகையிலும் பிரார்த்தனையானது ராஜ்யத்தின் ராஜாவை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.ஆனால்,பிதாவாகிய தேவன் ராஜாவாக இருந்தாலும், நமக்கு பிதா என்றஉறவு முக்கியமானது.எனவே, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதா”என்று அவரை அழைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கூற்றானது நமது புரிதலை ஒளிர செய்கிறது! பல சமயங்களில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளை மட்டுமே தேவனிடம் கொண்டு வந்து சர்வவல்லமையுள்ள தேவனால் தீர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.அற்பமான விஷயங்களை அவரிடம் கொண்டு செல்ல கூடாதென்றும் அது அவருக்கு முக்கியத்துவம் இல்லாதிருக்கலாம் என்றும் நினைக்கிறோம்.

ஆனால், தேவன் நம் தந்தையாக,அப்பா பிதாவாக இருக்கும்போது,நம்முடைய பெரிய அல்லது சிறிய, குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமற்ற எல்லா பிரச்சினைகளிலும் அவரை உதவிக்கு அழைக்க முடியும். பிரார்த்தனைக்காக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்லது யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்கள். மிகவும் அந்தரங்கமானவை – அவை அனைத்தையும் நம் பிதாவாகிய தேவன் அறிந்திருக்கிறார். மேலும் இவை அனைத்திலும் ஈடுபடவும் அதை மிக நுணுக்கமாக தீர்த்து வைப்பதும் அவர் சித்தமாக இருக்கிறது.நன்றி அப்பா!

என் அன்பானவர்களே, இந்த வாரம் பரலோகத் தகப்பன் உங்களுக்காக அவர் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பது நாம் சாதாரணமாக நினைப்பது போல் ஒரு நிர்வாக மற்றும் பொதுவான விஷயம் அல்ல,மாறாக அது நீதி நிறைந்தது, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியில் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்தது. உங்கள் பிதாவாகிய தேவன் ஈடுபடும்போது அது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆமென் !

வாழ்க்கையின் மிக அற்பமான பிரச்சனைகளுக்கு கூட தீர்வு பெறுவது இந்த வாரம் உங்கள் சாட்சியாக இருக்கட்டும்.தயவு உங்களை ஒரு கேடயமாக சூழ்ந்துள்ளது.அவருடைய நீதியானது ஒவ்வொரு கோணலான பாதையையும் நேராக்க உங்களுக்கு முன் செல்கிறது. அவருடைய மகிழ்ச்சியே உங்கள் பலம்!ஆமென் மற்றும் ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *