மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

20-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். லூக்கா 22:32NKJV.

தேவனுடைய ராஜ்ஜியம் வருவதன் நோக்கம் உங்கள் சக மனிதர்களுக்கு நீங்கள் உதவுவதாகும். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
தேவன் உங்களை கடன்களிலிருந்தும், நோய்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவிக்கிறார், அதனால் நீங்கள் உங்கள் அயலாரையும் அதே சோதனையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க தேவனின் கருவியாக இருப்பீர்கள்.

நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் நம் வாழ்க்கைப் படகை மூழ்கடிப்பது போல் தோன்றலாம், ஆனால் அது அவருக்கு மகிமை உண்டாக்கி நம்மை உயர்த்துவதாகும், சேற்றிலிருந்து நம்மை உடனடியாக உயரத்தில் அவரது மாட்சிமையுடன் அமரும்படி மறுரூபமடைய செய்கிறது. சூழ்நிலைகளின் காரணமாக மூழ்கும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியும் கூட உயர்த்தபட வேண்டும் என்ற நோக்கத்துடன் பலப்படுத்தப்பட்டு மகிமையின் ராஜாவை அனுபவிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது செழிப்பான ஆத்துமாக்களால் பரலோகத்தை நிரப்பி பாதாளத்தை கொள்ளையடிப்பது ஆகும்.

ஆம் என் அன்பிற்குரியவர்களே, நமது அன்பான பிதாவின் கரங்களில் உங்களை ஒப்படைத்து விடுங்கள், நீங்கள் பிதாவிடமிருந்து பெறும்போது உங்களின் அனைத்து தொடர்புகளுக்கும் (குடும்பம், நண்பர்கள், அந்நியர்கள்) கொடுக்கிறீர்கள்.

சில சமயங்களில், நீங்கள் மற்றொரு ஆத்துமாவிற்கு தண்ணீர் ஊற்றும்போது உங்கள் அற்புதத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் (“தாராள மனப்பான்மை ஐசுவரியமாக்கப்படும், மேலும் தண்ணீர் பாய்ச்சுபவர் தானும் பாய்ச்சப்படுவார்.” நீதிமொழிகள் 11:25).

பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மக்கள் மகிமைப்படுத்துவதற்காக உங்களில் உள்ள அவருடைய நீதி உங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் பரவட்டும் (மத்தேயு 5:16).ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *