21-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்!
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. ரோமர் 10:1 NKJV
4.அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5.பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.ரோமர் 9:4-5 NKJV
விசுவாசத்தின் மூலம் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இருக்கிறது!
ஆபிரகாமுக்கு தேவன் அருளிய ஆசீர்வாதமானது, இஸ்ரவேல் மூலம் பூமியின் முகாந்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதிப்பதாகும்.(ஆதியாகமம் 12:2-3).
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேல் மூலமாக மனித குலத்திற்கு அனுப்பினார்.
முழு வேதத்தில் நாம் கண்ட அனைத்து வாக்குறுதியும்,மேலும் நாம் அனுபவித்த மற்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் இஸ்ரேலின் நிமித்தமாக நமக்கு கிடைத்தன.
இஸ்ரவேலினால் எல்லா தேசங்களுக்கும் இரட்சிப்பு வந்தது.அல்லேலூயா! ஆமென்!
இன்று, நாம் காணும் உலகத்தில்,இஸ்ரவேல் இன்னும் தங்கள் மேசியா வருவார் என்று எதிர்பார்க்கிறது. ஆனால்,அவர் ஏற்கனவே வந்து, பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றி தேவனின் வலது பாரிசத்தில், மகிமையின் ராஜாவாக பரலோகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை அறியாமல் அவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கிறது!
ஆகையால், அவர்கள் தங்கள் மேசியாவை நிராகரித்தார்கள் என்பது உண்மைதான், இப்போது இரட்சிப்பு உலகிற்கு வந்துவிட்டது. _அதேபோல், இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளும் போது யூதர்கள் அல்லாத அனைத்து விசுவாசிகளுக்கும் “அபரிவித ஆசீர்வாதங்கள்” வரும் என்பதும் உண்மைதான், அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் இருக்கும். ரோமர் 11:12.
என் பிரியமானவர்களே, எருசலேம் மற்றும் இஸ்ரவேலின் சமாதானத்திற்காகவும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காகவும் நாம் ஜெபிக்கும்போது, தேவன் நம் வாழ்வில் எண்ணற்ற ஆசீர்வாதங்களைத் தருகிறார்.(சங்கீதம் 122:6). ஆமென்!
இஸ்ரவேலர் மீதுள்ள பகுதியளவு குருட்டுத்தன்மை நீங்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்,அதனால் அவர்கள் தங்கள் கண்களால் கண்டு, தங்கள் காதுகளால் சத்தியத்தை கேட்டு, தங்கள் இதயங்களால் புரிந்துகொண்டு குணமடைய வேண்டும். (ரோமர் 11:25,26 , ஏசாயா 6:10). ஆமென் !
இஸ்ரவேல் தேசமானது கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியாயிருக்கிறது என்று அறிக்கையிடுவோமாக! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்.
பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!