22-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய உயர்த்தும் மகிமையின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!
3. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ரோமர் 10:3-4NKJV
இஸ்ரவேலுக்காக ஜெபிப்பது உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் சுய நீதியிலிருந்து உங்களைத் தடுக்கிறது!
சுய நீதி என்றால் என்ன?நியாயபிரமாணத்தைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதன் மூலம் தேவனுடன் சரியாக இருக்க முயற்சி செய்வதாகும்.பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.(ரோமர் 3:20).
நாம் எவ்வளவு பாவமுள்ளவர்கள் என்பதை நியாயப்பிரமாணம் வெளிப்படுத்துகிறது. எந்த அளவுக்கு நியாயபிரமாணத்தைக் கடைபிடிக்க முயல்கிறோமோ அந்த அளவிற்கு தோல்வி அடைகிறோம்.
தேவனைப் பிரியப்படுத்த நான் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக என்னுடைய செயல்கள் மூலம் தேவன் பிரியப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
இதைக்குறித்து தான் பவுல் அழுது புலம்பினார், “ஐயோ, நான் என்ன ஒரு பரிதாபத்திற்குரியவன்! பாவமும் மரணமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிப்பது யார்?” என்று ரோமர் 7:24 NLT கூறுகிறது.இது ஒரு பயங்கரமான தீய சுழற்சியாகும், இது சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மட்டுமே முடிவுக்கு வந்தது.
சிலுவையில், நியாயபிரமாணத்தின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டது (நீதியானது), தேவனின் பரிசுத்தம் முழுமையாக உயர்த்தப்பட்டது மற்றும் தேவனின் அன்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. அல்லேலூயா! ஆமென்!
பாவத்தை என்றென்றும் நீக்கி,பாவியை அரவணைத்து, அவனை என்றென்றும் நீதியுள்ளவனாக அறிவிப்பதற்கான தேவனின் வழி இதுவே!
இதை தான் இஸ்ரவேல் தேசமானது இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் கண்களை மூடியிருக்கும் செதில்கள் உதிர்ந்து, அவர்கள் தங்கள் மேசியாவை இயேசுவின் நபரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஜெபிப்பதே நமது பாரமாக இருக்கிறது!
என் பிரியமானவர்களே, ‘உமது ராஜ்யம் வருவதாக‘, என்பது உங்களது அனைத்து சோதனைகள் மற்றும் போராட்டங்களிலிருந்து உங்களைக் காப்பாற்ற, அவருடைய மகத்தான சிம்மாசனத்தில் அவருடன் என்றென்றும் ஆளுகை செய்ய உங்களை உயர்த்தி அவரது கிருபையைத் தருகிறது! ஆமென் 🙏
இஸ்ரவேல் தேசம் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறது!
நீங்களும் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியே உயர்த்தும் மகிமை!
அந்த உயர்த்தும் மகிமையை இன்றே அனுபவியுங்கள்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய உயர்த்தும் மகிமையின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!
பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!